Published:Updated:

``பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறாகிவிட்டது!" - அ.தி.மு.க கவலை

நமது நிருபர்
``பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறாகிவிட்டது!" - அ.தி.மு.க கவலை
``பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறாகிவிட்டது!" - அ.தி.மு.க கவலை

``17-வது நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறாகிவிட்டது" என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். 

``பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறாகிவிட்டது!" - அ.தி.மு.க கவலை

நாடு முழுவதிலும் 17-வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இரண்டு, மூன்று சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், இந்திய அளவில் பி.ஜே.பி முன்னிலையில் இருந்துவருகிறது. இதற்கடுத்து, மற்றவையும், காங்கிரஸும் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரம் முதலே பல மாநிலங்களிலும் பி.ஜே.பி. முன்னிலையில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருகை தந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், ``இந்தத் தொகுதியின் (மத்திய சென்னை) வெற்றியை, நாங்கள் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை.  தமிழகத்தில் அ.தி.மு.க போட்டியிட்ட 20 தொகுதிகளில், 12 தொகுதிகளிலாவது வெற்றிபெறும் என்று நினைத்தோம். ஆனால், இந்த அளவுக்குத் தோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதிலும், 37 இடங்கள் என்பது மிகப்பெரிய தோல்வியே. எனினும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 இடங்கள் முன்னிலைவகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பி.ஜே.பி. அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால், அந்தக் கட்சியே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இருந்தாலும், பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டனர். நாங்கள், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது பற்றி இப்போதுதான் நன்கு புரிந்துகொண்டோம்" என்றார், வேதனையுடன். 

இப்போதான் அ.தி.மு.க-வுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது.

Vikatan