Published:Updated:

எம்.பி-யாகும் 5 எழுத்தாளர்கள்!

ஆ.பழனியப்பன்
எம்.பி-யாகும் 5 எழுத்தாளர்கள்!
எம்.பி-யாகும் 5 எழுத்தாளர்கள்!

துரையில் சு.வெங்கடேசன், தூத்துக்குடியில் கனிமொழி, தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், விழுப்புரத்தில் ரவிக்குமார், கரூரில் ஜோதிமணி என ஐந்து எழுத்தாளர்களும் முன்னிலை வகித்துவருகிறார்கள்.

எம்.பி-யாகும் 5 எழுத்தாளர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் ஐந்து எழுத்தாளர்கள் போட்டியிட்டனர். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மதுரையிலும், தி.மு.க சார்பில் தூத்துக்குடியில் களமிறங்கிய கனிமொழியின் முன்னிலையில் இருக்கின்றனர். அதேபோல், எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க வேட்பாளராக தென்சென்னையிலும், எழுத்தாளர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக விழுப்புரத்திலும், எழுத்தாளர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கரூரிலும் போட்டியிட்டார்கள். 

எம்.பி-யாகும் 5 எழுத்தாளர்கள்!

மதுரையில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ்சத்யனுக்கும் சு.வெங்கடேசனுக்கும் நேரடிப் போட்டி நிலவியது. ராஜ்சத்யன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ராஜன் செல்லப்பாவின் மகன் ஆவார். தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையைக் காட்டிலும் தொடக்கம் முதலே கனிமொழி முன்னிலை வகித்து வருகிறார். கரூரில் மக்களவைத் துணை சபாநாயகரான அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரைக்கும் ஜோதிமணிக்கும் நேரடிப் போட்டி நிலவியது. தென்சென்னையில் சிட்டிங் எம்.பி-யும் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனுக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. விழுப்புரத்தில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கும் ரவிக்குமாருக்கும் நேரடி போட்டி இருந்தது.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் ஐந்து எழுத்தாளர்களும் எம்.பி ஆகிறார்கள்.

Vikatan