Published:Updated:

`டாப் கியரில் ஜாேதிமணி; அப்செட்டான தம்பிதுரை!'- கரூர் களநிலவரம்

துரை.வேம்பையன்
`டாப் கியரில் ஜாேதிமணி; அப்செட்டான தம்பிதுரை!'- கரூர் களநிலவரம்
`டாப் கியரில் ஜாேதிமணி; அப்செட்டான தம்பிதுரை!'- கரூர் களநிலவரம்

கரூர் நாடாளுமன்றத் தாெகுதியில் காங்கிரஸூக்கு வாக்குகள் எக்கச்சக்கமாகக் கிடைக்க, வெறுத்துப்பாேன தம்பிதுரை, `நீங்களே பார்த்துக்குங்க' என்றபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தைவிட்டு கிளம்பிவிட்டார்.

`டாப் கியரில் ஜாேதிமணி; அப்செட்டான தம்பிதுரை!'- கரூர் களநிலவரம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் பதினெட்டாம் தேதி நடைபெற்றது. அந்தவகையில், கரூர் நாடாளுமன்றத் தாெகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை பாேட்டியிட்டார். தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜாேதிமணி களமிறக்கப்பட்டார். நான்குமுறை கரூர் தாெகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயித்த தம்பிதுரை, இந்தமுறையும் வெற்றக்கனியைப் பறிக்க நினைத்தார். ஆனால், வாக்கு கேட்டு பாேன அவருக்கு தாெகுதிக்குள் பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், தம்பிதுரை, `வெற்றி எனக்குதான். இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாேம்' என்று நம்பிக்கையாக வாக்கு கேட்டார். ஜாேதிமணியாே தம்பிதுரைக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்குச் சாதகமாக்கி சமயாேசிதமாக வாக்குகள் கேட்டார். `தம்பிதுரையைத் தாேற்கடித்து, இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என்று சூளுரைத்தார். 

`டாப் கியரில் ஜாேதிமணி; அப்செட்டான தம்பிதுரை!'- கரூர் களநிலவரம்

இந்நிலையில், கரூர் வேலாயுதம்பாளையம் அருகில் உள்ள குமாரசாமி பாெறியியல் கல்லூரியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதையாெட்டி, இன்று காலை எட்டு மணிக்கே தம்பிதுரை வாக்குகள் எண்ணும் மையத்திற்கு வந்துவிட்டார். ஆரம்பம் முதலே தனக்குச் சாதகமாக வாக்குகள் வரும் என்று நினைத்தாராம். ஆனால், ஆரம்பம் முதலே ஜாேதிமணி டாப் கியரில் வாக்கு வித்தியாசத்தைப் பெற, அப்செட்டானார் தம்பிதுரை. `தாெகுதி மக்களுக்கு எவ்வளவாே நல்லது பண்ணினேன். இப்படி கவுத்துப்புட்டாங்களே!' என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம். அடுத்தடுத்த சுற்றுகளில் ஜாேதிமணிக்கு அதிக வாக்குவித்தியாசம் கிடைக்க, சாேகத்தில் மூழ்கினார் தம்பிதுரை. ஒருகட்டத்தில் நிலைகாெள்ளமுடியாமல், அங்கே கூடியிருந்த அ.தி.மு.கவினரிடம், `நீங்க இருந்து பார்த்துக்குங்க. நான் கிளம்புறேன்' என்றுபடி, வீட்டிற்குக் கிளம்பிவிட்டார். ஆனால், அவரது ஆதரவாளர்கள் சிலராே, `கரூர் பாேனா என்ன, அண்ணன் ராஜ்யசபா எம்.பியாகி, டெல்லிக்கு பழையபடி பறப்பார்' என்றார்கள்.