Published:Updated:

`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி

`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி
`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி

`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி

`தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக் காலம்' என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 

`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னிலை நிலவரம், மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி என்பதை உறுதி செய்திருக்கிறது. வேலூர் தவிர்த்து தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில், தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 340 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 93 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டு கூட்டணிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகள் 109 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. 

`தமிழக காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம்!' - கே.எஸ். அழகிரி

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க 38  இடங்களிலும், அ.தி.மு.க ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கிறது. 

தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி நம்மிடம் பேசியதாவது, ``இந்திய அளவில் தேர்தல் முடிவுகள் வருத்தத்தைத் தந்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி முகத்தில் இருக்கிறது. அது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸுக்கு இது மலர்ச்சிக்காலம். விந்திய மலைக்கு அந்தப் பக்கம் இருக்கின்ற மக்கள் வேறு விதமாக யோசிக்கிறார்கள். இதிகாசங்களில் கடவுள்கள் நிறைய தவறு செய்திருப்பதாகச் சொல்வதுபோல் மக்களும் தவறு செய்திருக்கிறார்கள். அது துரதிஷ்டவசமானது'' என்றார்.
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு