Published:Updated:

மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? 

மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? 
மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? 

டந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என்றும், தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் நிதியமைச்சராவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? 

கடந்த முறை மோடி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் பலர் வயதானவர்களாகவோ உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். இதனால் அவர்களுக்குப் பதிலாக இளம் வயதுடைய புதுமுகங்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மோடி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் இந்த முறை அமைச்சர் பதவி வகிப்பதை விரும்புவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அப்படியே அவர் அமைச்சராக வேண்டுமென்றாலும், அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால், ராஜ்யசபை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய அவசியம் உள்ளது. எனவே, அதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. 

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக நியமிக்க மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது. அப்படி அமித் ஷா அந்தப் பதவியில் அமர்ந்தால், தற்போதைய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.  அப்பதவியைத் தற்போது வகிக்கும் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? 

அதேபோன்று, தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால், அவருக்குப் பதிலாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அப்பதவியில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே, அருண் ஜெட்லி உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நிதியமைச்சக இலாகாவை கவனித்தவர் என்பதால், அவருக்கே அப்பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. 

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்த ஸ்மிருதி இரானி நிச்சயம் கேபினட் அமைச்சராக நியமிக்கப்படுவார். சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், வேறு நல்ல துறைக்கு அமைச்சராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.  நிதின் கட்கரி, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை எனப் பல இலாக்காக்களை வைத்துள்ளார். அவர், அதே இலாக்காக்களுக்கான அமைச்சராகவே நீடிப்பார் எனக் கூறப்படுகிறது. 

மோடி அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு! - நிதியமைச்சர் யார்? 

அதேபோன்று, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, இந்த முறை நல்ல இலாக்கா கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜெகத் பிரகாஷ் உள்ளிட்டோர், மோடி அமைச்சரவையில் நீடிப்பார்கள் எனத் தெரிகிறது. 

இவர்களைத் தவிர, மற்றவர்கள் பெரும்பாலும் புதுமுகங்களாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.