Published:Updated:

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics
மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

ந்தியாவில் 17-வது மக்களவையை அமைப்பதற்கான தேர்தல், ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 542 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், மே 23-ம் தேதி வெளியாகி பரபரப்பாக முடிந்துள்ளன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளையொட்டியே, தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியைவிட, அதிக வாக்குகள் வித்தியாசத்துடன் பி.ஜே.பி கூட்டணி தற்போது வெற்றியை ருசித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

இந்தியாவில் கடந்த 1998-ல் தொடங்கி, தற்போது முடிந்துள்ள (2019) மக்களவைத் தேர்தல்கள்வரை எந்தெந்தக் கட்சியினர் எத்தனை  தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர் என்பதைப் பார்ப்போம்.

1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 61.9 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 252 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 166 இடங்களையும், மற்ற கட்சிகள் 119 இடங்களையும் பிடித்தன. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி. அதிக இடங்களில் வெற்றிபெற்று, நாட்டின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் பதவியேற்றார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் இருந்தார். 13 மாதங்களே நீடித்த அந்த ஆட்சி கவிழ்ந்து, மீண்டும் 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் 59.9 சதவிகித வாக்குகள் பதிவாகின. பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்று 296 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களையும், மற்ற கட்சிகள் 113 இடங்களையும் பிடித்தன. பிரதமராக மீண்டும் அடல்பிஹாரி வாஜ்பாய் பதவியேற்றார். எதிர்க்கட்சித் தலைவராக அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 58 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. பி.ஜே. கூட்டணி 189 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 222 இடங்களையும், மற்ற கட்சிகள் 132 இடங்களையும் பிடித்தன. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவியேற்றார். எதிர்க்கட்சித் தலைவராக எல்.கே. அத்வானி இருந்தார்.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 58.1 சதவிகிதம் வாக்குகள் பதிவான நிலையில், மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று, மன்மோகன் சிங்கே இரண்டாவது முறையாக பிரதமராகத் தொடர்ந்தார். காங்கிரஸ் கூட்டணி 262 இடங்களில் வெற்றிபெற்றது. பி.ஜே.பி. கூட்டணி 159 இடங்களையும், மற்ற கட்சிகள் 79 இடங்களையும் பிடித்தன. எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்தார். 

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

கடந்த தேர்தலில், அதாவது 2014-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 66.4 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இதில் பி.ஜே.பி. தலைமையிலான கூட்டணி 336 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 59 இடங்களையும், இதரக் கட்சிகள் 148 இடங்களையும் பிடித்தன. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி முதல்முறையாகப் பதவியேற்றார். எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழந்து விட்டதால், யாரும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவில்லை.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்...1998 முதல் 2019 வரை! VikatanInfographics

தற்போது, நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இந்த முறைதான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. பி.ஜே.பி கூட்டணி 351 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மற்ற கட்சிகள் 101 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. இப்போது பிரதமராக உள்ள மோடி மீண்டும் பிரதமர் பதவியேற்க உள்ளார். பி.ஜே.பி. இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருப்பதை, அந்தக் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு