Published:Updated:

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``மோடி தேசியச் செயலாளராக இருந்தார். கட்சிக் கூட்டம் ஒன்றில் அவர் பேசிய கூற்றுக்கு நான் கண்டனம் தெரிவித்துச் சத்தம்போட்டேன். மறுபேச்சு பேசாமல் அமைதியாக இருந்துவிட்டார்."

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``மோடி தேசியச் செயலாளராக இருந்தார். கட்சிக் கூட்டம் ஒன்றில் அவர் பேசிய கூற்றுக்கு நான் கண்டனம் தெரிவித்துச் சத்தம்போட்டேன். மறுபேச்சு பேசாமல் அமைதியாக இருந்துவிட்டார்."

Published:Updated:
``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், சில கட்சிகளுக்கு மகிழ்ச்சியையும் சில கட்சிகளுக்கு வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நடிகை விஜயசாந்தியிடம் பேசினோம்.

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``தமிழக தேர்தல் முடிவுகள் பற்றி உங்கள் கருத்து?"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தமிழகத்தில் தற்போது நடந்துகொண்டிருப்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா விட்டுச்சென்ற ஆட்சிதான். `நாங்கள் வெற்றி பெற்று, ஆளும் அ.தி.மு.க ஆட்சியை வீழ்த்துவோம்' என்று டி.டி.வி.தினகரன் சொன்னார். அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அப்போது ஜெயலலிதா அம்மாவின் செல்வாக்கு யாரிடம் இருக்கிறது எனத் தெரிந்துவிடும். தி.மு.க கூட்டணி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, தி.மு.க மற்றும் எங்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றியாளர்களுக்கு என் வாழ்த்துகள்."

``தெலங்கானா மாநிலத்தில் பி.ஜே.பி வேகமாக வளர்ந்து வருகிறதே..."

``மொத்தமுள்ள 17 தொகுதிகளில், நாங்கள் மூன்று தொகுதிகள் வென்றுள்ளோம். பி.ஜே.பி நான்கு தொகுதிகளில் வென்றுள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வெற்றியைத்தான், பி.ஜே.பி பறித்துள்ளது. எங்கள் மாநிலத்தில் பி.ஜே.பி-யின் வெற்றி தொடராது. ஆளும் சந்திரசேகர ராவ்வின் ஆட்சிக்கு எதிரான மக்கள் மனநிலையைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாங்கள் தீவிரமாக வேலை செய்து, அடுத்துவரும் தேர்தலில் பெரிய வெற்றி பெறுவோம். அதற்கு எங்கள் கட்சியுடன் நானும் அதிகளவில் உழைக்கப்போகிறேன்."

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``மோடி மீண்டும் பிரதமராகியுள்ளார். பி.ஜே.பி-யின் பெரிய வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தங்கள் தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டது பி.ஜே.பி எல்லாம் அவர்களின் திட்டமிட்ட செயல்தான். தேசிய அளவில் காங்கிரஸ் பெரிய கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எங்கள் மீது கோபத்தில் இருந்ததாக எடுத்துக்கொள்வோம். ஆனால், இந்த முறை அப்படியில்லையே! சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநில தேர்தல்களில் எங்கள் கட்சி ஆட்சியைப் பிடித்ததே. அதற்குள் எங்கள் மீது மக்களுக்கு எதிர்ப்பு உண்டாகியிருக்குமா. அப்படியே என்றாலும், அந்த எதிர்ப்பு முழுக்கவே பி.ஜே.பி-க்கு சாதகமாகியிருக்குமா. வட இந்தியாவில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பெரிய அளவில் மோசடி வேலைகள் நடந்துள்ளன. 

மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு பி.ஜே.பி கட்சி மீது மக்களுக்குப் பெரிய ஆதரவு இருந்ததா. கருத்துக் கணிப்பில் வந்ததுபோல அவர்கள் 300 இடங்களில் வெற்றி பெற்றதெல்லாம் வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தேர்தல் நியாயமாக நடந்ததா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்."

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``மோடிக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

``நான் முன்பு பி.ஜே.பி-யில் மகிளா மோர்சா செயலாளராக இருந்த நேரம். மோடி தேசியச் செயலாளராக இருந்தார். கட்சிக் கூட்டம் ஒன்றில் அவர் பேசிய கூற்றுக்கு நான் கண்டனம் தெரிவித்துச் சத்தம்போட்டேன். மறுபேச்சு பேசாமல் அமைதியாக இருந்துவிட்டார். அன்று அமைதியாக இருந்த மோடிதான், இனி அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் இந்தியாவின் பிரதமர். அவர் அரசியலில் இப்படி உயர்வார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மோடி அவர்களே... எதிர்க்கட்சிகள் மீது வன்மத்தைக் காட்டுவதைவிடுத்து, நாட்டு மக்கள் நலனில் அதிக அக்கறை செலுத்துங்கள். அரசியல் விரோதங்களை மறந்து, மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

``பெரிய கட்சியான காங்கிரஸ், மாநிலக் கட்சிகளைப்போல இரட்டை இலக்கங்களில் வெற்றி பெறுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``வருத்தமாகத்தான் இருக்கிறது. அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம் என்று சொல்லிக்கொண்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை நாங்கள் ஆராய வேண்டும். சூழ்ச்சிகள் அதிகம் செய்யும் பி.ஜே.பி-யின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக நாங்கள் வலுவாக உழைக்க வேண்டும். அதற்கான இந்நேரத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம். தவிர, எங்கள் கட்சியில் நிலவும் உள்கட்சிப் பூசலும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இப்படி எங்கள் தரப்பிலுள்ள பிரச்னைகளையெல்லாம் நாங்கள் சரிசெய்தே ஆக வேண்டும்."

``எங்களுக்கு வழி விடுங்கள்; இல்லையேல் இடையூறு செய்யாதீர்கள்!" - விஜயசாந்தி

``தேர்தலில் வெற்றி பெறுவது பெண்களுக்கு எவ்வளவு சவாலானது?"

``அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நானும் அனுபவத்தில் நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆணாதிக்க அரசியலில், நாங்கள் வெற்றி பெறுவதற்கு பல மடங்கு அதிக உழைப்பைக் கொடுக்க வேண்டும். கட்சி சார்பில்லாமல் அனைத்துக் கட்சியினருக்கும் நான் சொல்லிக்கொள்வது, பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். அவர்கள் திறனை வெளிப்படுத்த வழி விடுங்கள்; வாய்ப்பு கொடுங்கள். இல்லாவிட்டால், இடையூறு செய்யாதீர்கள்" என்கிறார் விஜயசாந்தி.