Published:Updated:

மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி; ஆனால், ஆந்திராவில்...?! #VikatanInfographics

மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி; ஆனால், ஆந்திராவில்...?! #VikatanInfographics
News
மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி; ஆனால், ஆந்திராவில்...?! #VikatanInfographics

ஆந்திர மாநிலத்தில் பி.ஜே.பி, போட்டியிட்ட 24 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' எனும் `நோட்டா'-வுக்குக் கிடைத்த வாக்குகளைவிடவும் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

ந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது. இரண்டாவது முறையாக மோடி, வரும் 30-ம் தேதி பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், பிரதமருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்களில் சிலர் கழற்றிவிடப்படுவார்களா? என்ற பேச்சுகள் டெல்லியில் உலவிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்துக்கும் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நாளான மே 30-ம் தேதி இரவு 7 மணிக்கு விடை கிடைத்துவிடும்.

மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி; ஆனால், ஆந்திராவில்...?! #VikatanInfographics

வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மண்ணைக் கவ்வவைத்து, மிகப்பெரிய வெற்றியை பி.ஜே.பி பெற்றிருந்தாலும், தமிழகம் மற்றும் கேரளாவில் பி.ஜே.பி-க்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் பி.ஜே.பி, போட்டியிட்ட 24 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் `யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' எனும் `நோட்டா'-வுக்குக் கிடைத்த வாக்குகளைவிடவும் மிகவும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அதாவது, ஆந்திராவில் மொத்தம் பதிவான வாக்குகளில் பி.ஜே.பி-க்கு 0.96 சதவிகித வாக்குகளே கிடைத்துள்ளன. ஆனால், நோட்டாவுக்கு 1.49 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக, அரக்குத் தொகுதியில் நோட்டாவுக்கு 47,955 வாக்குகள் கிடைத்துள்ளன. அந்தத் தொகுதியில் பி.ஜே.பி பெற்ற வாக்குகள் வெறும் 17,578 மட்டுமே. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி; ஆனால், ஆந்திராவில்...?! #VikatanInfographics

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற மத்திய அரசின் செயல்பாடுகளால் ஆந்திரா அதிகளவு பாதிக்கப்பட்டதால், அந்த மாநில மக்கள் பி.ஜே.பி மீது மிகவும் வெறுப்புடன் இருப்பதையே இந்த வாக்கு விகிதம் வெளிப்படுத்துகிறது. ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், 22 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு மொத்தம் 1,55,30,231 வாக்குகள் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 49.15 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். 

மத்தியில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சி; ஆனால், ஆந்திராவில்...?! #VikatanInfographics

NOTA எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற நடைமுறை, கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, டெல்லியில் 50,000 வாக்குகளும், சத்தீஸ்கரில் 3.56 லட்சம் வாக்குகளும், மத்தியப்பிரதேசத்தில் 5.9 லட்சம் வாக்குகளும், ராஜஸ்தானில் 5.67 லட்சம் வாக்குகளும், மிசோரமில் 3,810 வாக்குகளும் நோட்டாவுக்குப் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.