Published:Updated:

கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ரவீந்திரநாத்!

கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ரவீந்திரநாத்!
கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ரவீந்திரநாத்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கப்போகும் அமைச்சர்கள் யார் யார் என்ற கேள்வியும் எழத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. 

கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ரவீந்திரநாத்!

இந்நிலையில், அவருக்கு நிதித்துறை இணை அமைச்சர் அல்லது பியூஷ் கோயலுக்குக் கிடைக்கும் துறையின் இணை அமைச்சராகப் பதவி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது. அவருக்கு இன்றைய தினம் அமைச்சர் பதவி கிடைத்திருந்தால், அது ரவீந்திரநாத் குமாருக்கு முக்கியமானதொரு நாளாக அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கின்றனர், அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ரவீந்திரநாத்!

சென்டிமென்டாகவே ரவீந்திரநாத்துக்கு இன்றைய தினம் (மே - 30) ராசியானது என்று சொல்லலாம். ஏனென்றால், அவர் 2018-ல் தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றதும் இதே நாளில்தான். எனவே, இன்றைய தினம் அவருக்கு மிக முக்கியமான நாளாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் சிலிர்த்திருந்தார்கள், ரவீந்திரநாத் குமாரின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை உடைக்கும்படியாகக் கடைசிவரை மோடியின் அமைச்சரவையில் ரவீந்திரநாத்துக்குப் பதவி வழங்கப்படவே இல்லை. இது, பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan