Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலுக்காக 20 குழுக்களை அமைத்தது பா.ஜ.க

நாடாளுமன்ற தேர்தலுக்காக 20 குழுக்களை அமைத்தது பா.ஜ.க
நாடாளுமன்ற தேர்தலுக்காக 20 குழுக்களை அமைத்தது பா.ஜ.க
நாடாளுமன்ற தேர்தலுக்காக 20 குழுக்களை அமைத்தது பா.ஜ.க

புதுடெல்லி: 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்ள வசதியாக 20 குழுக்களை பா.ஜ.க அமைத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் சந்தித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அனந்தகுமார், அனைத்து தேர்தல் குழுக்களையும் அக்கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானி வழிநடத்துவார் என்றார்.

மோடி தலைமையிலான தேர்தல் பிரசாரக் குழுவில் மூத்த தலைவர்கள் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், வெங்கய்யா நாயுடு, நிதின் கட்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்.

இதேபோல தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊடக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, அமித் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேரணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு அனந்த்குமாருக்கும், வருண் காந்திக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

##~~##
பாரதிய ஜனதாவின் தொலைநோக்கு திட்டங்களை தயாரிக்கும் குழுவுக்கு நிதின் கட்கரி தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நிதின் கட்கரி டெல்லி விவகாரங்களை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.