Published:Updated:

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: வெங்கையா நாயுடு ஆரூடம்

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: வெங்கையா நாயுடு ஆரூடம்
பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: வெங்கையா நாயுடு ஆரூடம்
பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல்: வெங்கையா நாயுடு ஆரூடம்

ஐதராபாத்: காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள். எனவே, பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரலாம் என பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், ஒருங்கிணைந்த பிரச்சார பயணக்குழு தலைவருமான வெங்கையா நாயுடு கூறினார்.

இதுகுறித்து ஐதராபாத்தில் இன்று நிருபர்களிடம் கூறும்போது, ''காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு நாளும் இழப்பை சந்தித்து வருவதால் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இந்த அரசை தூக்கி எறிய மக்கள் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் மாதம் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என டெல்லி மக்கள் நினைக்கின்றனர்.

எனவே, எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதற்கான திட்டங்களுடன் மாநில பா.ஜ.க. தயார்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நவம்பரில் வந்தால் எங்களுக்கு பிரச்சாரத்திற்காக 100 நாட்கள் கிடைக்கும், ஏப்ரலில் நடந்தால் 200 நாட்கள் கிடைக்கும். அதற்கேற்ப நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்துவோம். இதற்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன'' என்றார்.


ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி

இதனிடையே, சேலத்தில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் வந்த வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ''பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரான பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சமூக விரோத கும்பலால் மூர்க்கத்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. இந்த படுகொலை சம்பவத்தை ஆய்வு செய்ய நேர்மையான ஒரு குழுவை அமைத்து, கொலை செய்த கும்பலை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். பலமான அரசியல் தலைவராக விளங்கும் ஜெயலலிதா, திறமையான போலீஸ் உள்ள தமிழ்நாட்டில் இந்த படுகொலை நடந்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.

##~~##
இந்து அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் அத்வானி ரத யாத்திரை செல்லும் போது குண்டு வைத்து கொல்ல சதி செய்தார்கள். வேலூரில் இந்து முன்னணி அமைப்பாளர் வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் மையப்பகுதியில் கமிஷனர் அலுவலகம் அருகிலேயே ரமேஷ் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, கமிஷனர் இந்த கொலையை சவாலாக எடுத்து கொண்டு கொலையாளிகளை கண்டறிய வேண்டும். தமிழக முதல்வர் இந்த சம்பவத்தில் தனி கவனம் செலுத்தி கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
வீ.கே.ரமேஷ்