Published:Updated:

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியாது: ப.சி.

Vikatan Correspondent

சிவகங்கை, மே 2,2011

கேரளா, மேற்கு வங்கத்தை போல் அல்லாமல், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார். ##~~##

சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு ப.சிதம்பரம் பேசுகையில், தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.

கேரளா, அசாம், புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி வெல்வது உறுதி. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் துணையுடன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும். ஆனால்,
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரஸா பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும்," என்றார் ப.சிதம்பரம்.