Election bannerElection banner
Published:Updated:

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தூசி  மோகன் , ஜோதி
தூசி மோகன் , ஜோதி

சிட்டிங் எம்.எல்.ஏ மீதான அதிருப்தி, சிறுபான்மையினர், பட்டியல் சமூக ஆதரவு உள்ளிட்ட விஷயங்களால் தி.மு.க முந்துகிறது.

திட்டக்குடி (தனி)

தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கணேசன், பா.ஜ.க-வின் `தடா’ பெரியசாமி ஆகியோர் மோதுகிறார்கள்.
கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பெரியசாமிக்கு, ‘பொதுவுடைமைச் சிந்தனையாளர்’ என்ற இமேஜ் இருப்பது ப்ளஸ். ஆனால், தொகுதியில் பா.ஜ.க மீது இருக்கும் அதிருப்தி அவருக்கு மைனஸ். வி.சி.க கூட்டணியுடன் களத்தில் நிற்கும் வி.கணேசன், பட்டியல் சமூக வாக்குகளுடன் பிற சமூக வாக்குகளையும், பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளையும் அறுவடை செய்கிறார். அதனால், திட்டக்குடியைத் தக்கவைக்கிறார் கணேசன்.

விருத்தாசலம்

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

காங்கிரஸ் கட்சியின் முத்தாண்டிக்குப்பம் ராதாகிருஷ்ணன், பா.ம.க-வின் கார்த்திகேயன், அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வின் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கணிசமான வன்னியர் சமூகத்தினரின் வாக்குவங்கி ப்ளஸ்ஸாக இருந்தாலும், தொகுதிக்கு அறிமுகமில்லாத வேட்பாளர் என்பது கார்த்திகேயனுக்கு மைனஸ். வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பது ராதாகிருஷ்ணனுக்கு மைனஸ். பிரேமலதா கணிசமான வாக்குகளை வாங்குவார். தொகுதியில் காங்கிரஸின் கையே ஓங்கியிருக்கிறது.

நெய்வேலி

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், பா.ம.க-வின் ஜெகன் ஆகியோர் மோதுகிறார்கள். சபா ராஜேந்திரன் மீது தொகுதியில் அதிருப்தி எதுவுமில்லை என்பது அவருக்கு ப்ளஸ். வன்னியர் சமூகத்தினரின் வாக்குவங்கி மட்டுமே ஜெகனுக்கு ப்ளஸ். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளும், பிற சமூக வாக்குகளும் தி.மு.க-வுக்கே கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால், நெய்வேலியைத் தக்கவைக்கிறார் சபா ராஜேந்திரன்.

பண்ருட்டி

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வின் சொரத்தூர் ராஜேந்திரன், தி.மு.க கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்துக்கு சீட் கொடுக்காததால் அவரின் ஆதரவாளர்கள் பிரசாரத்தைப் புறக்கணிப்பது சொரத்தூர் ராஜேந்திரனுக்கு மைனஸ். அ.தி.மு.க உட்கட்சிப்பூசல், சிறுபான்மையினரின் வாக்குகள், தி.மு.க சின்னத்தில் போட்டியிடுவது ஆகியவை சாதகமாக அமைவதால், வேல்முருகன் முந்துகிறார்.

கடலூர்

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அமைச்சர் எம்.சி.சம்பத், தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோர் மோதுகிறார்கள். பத்தாண்டுகளாகத் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற வாக்காளர்களின் அதிருப்தி சம்பத்துக்கு மைனஸ் ஆக இருந்தாலும், அதிகார பலம் கைகொடுக்கிறது. கட்சி தாவி வந்தவர் என்ற இமேஜ், தி.மு.க-வுக்குள் இருக்கும் பூசல் ஆகியவை ஐயப்பனுக்கு மைனஸ். மீண்டும் தொகுதியை சம்பத் தக்கவைக்கிறார்.

குறிஞ்சிப்பாடி

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயமும் மோதுகிறார்கள். தொகுதிக்குத் தொடர்பில்லாதவர் என்பதும், உட்கட்சிப்பூசலும் செல்வி ராமஜெயத்துக்கு மைனஸ். பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் உள்ளூர் செல்வாக்கு, கூட்டணி பலம் காரணமாக, குறிஞ்சுப்பாடியில் சூரியனே மீண்டும் உதிக்கிறது.

புவனகிரி

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ துரை கி.சரவணன், அ.தி.மு.க-வின் அருண்மொழித்தேவன் ஆகியோர் மோதுகிறார்கள். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்துக்கு இந்தத் தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவரின் ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளிலிருந்து ஒதுங்கியிருப்பதும், வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அருண்மொழித்தேவனுக்கு மைனஸ். பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் வியாபாரிகளின் வாக்குகள் துரை கி.சரவணனுக்கு சாதகமாக அமைவதால், புவனகிரியைத் தக்கவைக்கிறார்.

சிதம்பரம்

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ பாண்டியன், தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் மோதுகிறார்கள். தொகுதியில் கணிசமான அளவிலுள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் அப்துல் ரஹ்மான் ரப்பானிக்கு ப்ளஸ். தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லாதது மைனஸ். பெரிய அளவில் அதிருப்தி இல்லை என்பதாலும், பா.ம.க வாக்குவங்கி கைகொடுக்கும் என்பதாலும் சிதம்பரத்தை பாண்டியன் தக்கவைக்கிறார்.

காட்டுமன்னார்கோயில் (தனி)

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ முருகுமாறன், வி.சி.க-வின் சிந்தனைச்செல்வன் ஆகியோர் மோதுகிறார்கள். சிந்தனைச்செல்வனின் தனிப்பட்ட செயல்பாடுகளால் அவர்மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி அவருக்கு மைனஸ். பட்டியல் சமூகத்தினர் அல்லாத பிற சமூகத்தினரின் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கே சாதகமாக அமையும் என்பதால், காட்டுமன்னார்கோயிலை முருகுமாறன் மீண்டும் தக்கவைக்கிறார்.

செங்கம் (தனி)

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க வேட்பாளர் மு.பெ.கிரி மீது கட்சியினரை அரவணைத்துச் செல்வதில்லை என்ற புகார் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை. அ.தி.மு.க-வில் போட்டியிடும் நைனாக்கண்ணு, கிரிக்குச் சமமான வேட்பாளர் இல்லை என்பதை அ.தி.மு.க-வினரே ஒப்புக்கொள்கிறார்கள். தொகுதியில் கணிசமாக இருக்கும் பட்டியல் சமூக வாக்குகளும் தி.மு.க-வுக்கு ஆதரவாகத் திரளுவதால் கிரி முன்னிலையில் இருக்கிறார்.

திருவண்ணாமலை

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 17 சதவிகித வித்தியாசத்தில் தி.மு.க வெற்றிபெற்ற தொகுதி என்பதால், தெம்பாக இருக்கிறது அந்தக் கட்சி. தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுவின் களப்பணிக்கு ஈடாக பா.ஜ.க வேட்பாளர் தணிகைவேல் பணியாற்றவில்லை. தணிகைவேல் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலிருப்பது புகாராகக் கிளம்பியதால், பா.ஜ.க-வினரும் சுணங்கிப்போய்விட்டனர். ‘சத்து’ மாத்திரைகளை தாராளமாக இறக்குகிறார் எ.வ.வேலு. தொகுதியில் தி.மு.க முன்னிலையில் இருக்கிறது.

கீழ்பென்னாத்தூர்

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பா.ம.க வலுவாக இருக்கும் தொகுதி. ஆனாலும், இங்கு பா.ம.க வேட்பாளர் செல்வக்குமாருக்கு வன்னியர் வாக்குகளைத் தாண்டி பிற சமூக வாக்குகளைத் தன் பக்கம் ஈர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. வன்னியரல்லாத சமூகங்கள், பட்டியல் சமூகத்தினர் தி.மு.க வேட்பாளர் பிச்சாண்டிக்கு ஆதரவாகத் திரள்கிறார்கள். ஆகவே, பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.

கலசப்பாக்கம்

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க-வின் சரவணனும், அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ பன்னீர்செல்வமும் மோதுகிறார்கள். பா.ம.க-வின் கட்டமைப்பு வலுவாக இருப்பது அ.தி.மு.க வேட்பாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பன்னீர்செல்வத்துக்குச் சாதகமாகியிருக்கிறது. தி.மு.க வேட்பாளர் சரவணன் போட்டியைக் கொடுத்தாலும், பன்னீர்செல்வம் முந்துகிறார்.

போளூர்

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். தி.மு.க வேட்பாளர் சேகரனும் அவருக்கு இணையான போட்டியாளர்தான். அ.ம.மு.க வேட்பாளர் விஜயகுமார் கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பிரிக்கிறார். ஆனாலும், பா.ம.க துணையிருப்பது, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சொந்தச் செல்வாக்கு காரணமாக, தொகுதியில் அ.தி.மு.க முந்துகிறது.

ஆரணி

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

மைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அ.தி.மு.க சார்பில் களமிறங்கியிருக்கிறார். இரண்டு ஒன்றியச் செயலாளர்களை மட்டும் உடன் வைத்துக்கொண்டு, மற்ற கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்ற புகார் அ.தி.மு.க-வினரிடம் எழுந்திருப்பது அவருக்கு மைனஸ். ஆனாலும், பா.ம.க-வின் செல்வாக்கு அவருக்குக் கைகொடுக்கிறது. தி.மு.க வேட்பாளர் அன்பழகன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கென குறிப்பிடத்தக்க செல்வாக்கு தொகுதியில் இருக்கிறது. இருதரப்புமே கடுமையாக சமபலத்துடன் மோதுவதால், இழுபறியான சூழலே நிலவுகிறது.

வந்தவாசி (தனி)

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ அம்பேத்குமார் மீண்டும் அந்தக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். தொகுதியில் அவர்மீது அதிருப்தி ஏதும் இல்லாததும், கணிசமாக இருக்கும் பட்டியல் சமூக வாக்குகளும் அவருக்கு ப்ளஸ். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சார்பில் முரளி சங்கர் போட்டியிடுவதால், பிற சமூக வாக்குகள் அம்பேத்குமாருக்கு ஆதரவாகத் திரளுகின்றன. தொகுதியில் மீண்டும் சூரியனே உதிக்கும்.

செய்யாறு

கடலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தூசி மோகன் மீண்டும் போட்டியிடுகிறார். பல ஊர்களில் அவர் உள்ளே நுழைவதற்குக்கூட எதிர்ப்பு இருக்கிறது. கணிசமாக இருக்கும் பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாகத் திரள்கின்றன. சிட்டிங் எம்.எல்.ஏ மீதான அதிருப்தி, சிறுபான்மையினர், பட்டியல் சமூக ஆதரவு உள்ளிட்ட விஷயங்களால் தி.மு.க முந்துகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு