Published:Updated:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பண்ணாரி, பி.எல்.சுந்தரம்
பண்ணாரி, பி.எல்.சுந்தரம்

தற்போதைய சூழலில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் சுந்தரம் முந்துகிறார்.

ஈரோடு - கிழக்கு

த.மா.கா-வில் யுவராஜாவும் காங்கிரஸில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெராவும் போட்டியிடுகிறார்கள். தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவர், கொங்கு வேளாளர் சமுதாய வாக்குகள், இரட்டை இலைச் சின்னம் ஆகியவை யுவராஜாவுக்கு பலம். அ.தி.மு.க-வினரும் யுவராஜாவின் வெற்றிக்குத் தீவிரமாக உழைக்கிறார்கள். திருமகன் ஈவெராவுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு மற்றும் சிறுபான்மையின மக்களின் ஓட்டுகள் சாதகமாக இருந்தாலும், சென்னைவாசி, தொகுதியில் பிரபலமில்லாதவர் ஆகியவை மைனஸாக இருக்கிறது. ஆகவே, யுவராஜா முந்துகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ஈரோடு - மேற்கு

கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் கே.வி.ராமலிங்கம் அ.தி.மு.க-விலும், முன்னாள் அமைச்சர் முத்துசாமி தி.மு.க-விலும் போட்டியிடுகிறார்கள். கே.வி.ராமலிங்கம் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் கடுமையான எதிர்ப்பலை வீசுகிறது. சிறுபான்மையினர் ஓட்டு, பா.ஜ.க மீதான எதிர்ப்பலை, அ.ம.மு.க வேட்பாளர் சிவசுப்பிரமணியன் பிரிக்கும் ஓட்டு ஆகியவை கே.வி.ராமலிங்கத்துக்கு பாதகம். முத்துசாமிக்குத் தொகுதியில் இருக்கும் செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளின் பலம், கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்குச் செய்த உதவிகள் ஆகியவை ப்ளஸ். எனவே, முத்துசாமி முந்துகிறார்.

மொடக்குறிச்சி

பா.ஜ.க-வின் சி.கே.சரஸ்வதியும், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியும் மோதுகிறார்கள். தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கியதில் அ.தி.மு.க சீனியர்கள் பலரும் அப்செட்டில் இருப்பதால், ஆர்வமில்லாமல் வேலை செய்கிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

கடந்த 10 ஆண்டுகளாக தொகுதியைத் தக்கவைத்திருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பெயர் சொல்லிக்கொள்ளும் அளவுக்குத் திட்டங்கள் கொண்டுவராததும் சரஸ்வதிக்கு மைனஸ். வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய விவசாயிகளின் ஆதரவு, தொகுதி மக்களுடனான நல்ல பரிச்சயம், உடன்பிறப்புகளின் தீவிர பிரசாரம் ஆகியவை சுப்புலட்சுமிக்கு ப்ளஸ். ஆகவே, கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க-வே முந்துகிறது.

பெருந்துறை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

கொ.ம.தே.க-வின் கே.கே.சி.பாலுவும், அ.தி.மு.க-வின் ஜெயக்குமாரும் மோதுகிறார்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் இங்கு தனித்துக் களமிறங்கி 14,545 ஓட்டுகளை வாங்கிய பாலு, இம்முறை தி.மு.க கூட்டணி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது பலம். கடந்த 15 ஆண்டுகளாக பெருந்துறை யூனியன் கவுன்சிலராக இருக்கும் ஜெயக்குமார், கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கி, தனக்கான செல்வாக்கை வளர்த்துவைத்திருக்கிறார். அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காத விரக்தியில் சுயேச்சையாகக் களமிறங்கியுள்ள தோப்பு வெங்கடாசலம் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவைத் தரும். எனவே, இழுபறிநிலைதான்!

பவானி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான கே.சி.கருப்பணனை எதிர்த்து தி.மு.க-வின் கே.பி.துரைராஜ் போட்டியிடுகிறார். கருப்பணனை எதிர்த்துக் களமாடும் தொகுதியில் செல்வாக்கு இல்லாதவராக துரைராஜ் இருக்கிறார். மக்கள் மத்தியில் அதிருப்திகள் இருந்தாலும், கடந்தமுறை தனித்துக் களமிறங்கி 20,727 வாக்குகளை வாங்கிய பா.ம.க., இம்முறை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதும், தொகுதியில் அதிகமுள்ள வன்னியர் சமுதாய வாக்குகளும் கருப்பணனுக்கு ப்ளஸ். இரட்டை இலையே முந்துகிறது.

அந்தியூர்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வின் கே.எஸ்.சண்முகவேலை எதிர்த்து, தி.மு.க-வின் ஏ.ஜி.வெங்கடாசலம் போட்டியிடுகிறார். கடந்த முறை 5,312 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஏ.ஜி.வெங்கடாசலத்துக்கு இம்முறை கூட்டணிக் கட்சிகள் கைகொடுக்கின்றன. தொகுதியில் கணிசமான வாக்குவங்கியுள்ள பா.ம.க கூட்டணியில் இருப்பது சண்முகவேலுவுக்கு ப்ளஸ்-ஆக இருந்தாலும், அ.ம.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.செல்வம் பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க-வுக்குச் சறுக்கலைக் கொடுக்கின்றன. அதனால், வெங்கடாசலம் சற்றே முந்துகிறார்.

கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

மைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க சார்பிலும், முன்னாள் எம்.எல்.ஏ-வான வெங்கிடுவின் மகன் மணிமாறன் தி.மு.க சார்பிலும் களம்காண்கிறார்கள். தொகுதியில் தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவாக இல்லாததும், தீவிரமற்ற பிரசாரமும் மணிமாறனுக்கு மைனஸாக இருக்கிறது. இந்தத் தொகுதியிலிருந்து ஏழு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையனின் செல்வாக்கு வலுவாக இருக்கிறது. அமைச்சர் செல்வாக்கு, அ.தி.மு.க-வின் திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்வது என செங்கோட்டையனே ரேஸில் முந்துகிறார்.

பவானிசாகர் (தனி)

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ட்சியினருக்கே பெரிதாகப் பரிச்சயம் இல்லாத டாஸ்மாக் ஊழியரான பண்ணாரி அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருப்பது கட்சி நிர்வாகிகளுக்கே அதிர்ச்சி. இந்த அதிருப்தி, பிரசாரத்திலும் கடுமையாக எதிரொலிக்கிறது. மக்களிடமும் பெரிதாக வரவேற்பில்லை. சி.பி.ஐ வேட்பாளரான பி.எல்.சுந்தரம், ஏற்கெனவே இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தொகுதி மக்களின் பிரச்னைகளுக்காகத் தொடர்ச்சியாக இயங்கிவந்தவர். அதனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. கடம்பூர் மலை, தாளவாடி மலையில் அவருக்கு வாக்குவங்கியும் பலமாக இருக்கிறது. தற்போதைய சூழலில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் சுந்தரம் முந்துகிறார்.

அடுத்த கட்டுரைக்கு