Published:Updated:

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சி.வி.சண்முகம், லட்சுமணன்
சி.வி.சண்முகம், லட்சுமணன்

பணபலம், வாக்குவங்கி ஆகியவற்றில் சமபலத்துடன் மோதினாலும், தொகுதியைத் தக்கவைக்கிறார் சி.வி.சண்முகம்.

உளுந்தூர்பேட்டை

அ.தி.மு.க-வின் ரா.குமரகுரு, தி.மு.க-வின் எ.ஜெ.மணிக்கண்ணன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

இருவருமே முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என்பதால் தொகுதிக்குப் பரிச்சயமானவர்கள். அ.தி.மு.க., பா.ஜ.க மீது பரவலாக இருக்கும் அதிருப்தி, தலித் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி ஆகியவை மணிக்கண்ணனுக்கு சாதகமாக இருக்கின்றன. இருப்பினும், அ.தி.மு.க தரப்பில் வைட்டமின் `ப’ தாராளமாகப் புழங்குவதால், குமரகுரு முந்துகிறார்.

ரிஷிவந்தியம்

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வின் சந்தோஷ்குமார், தி.மு.க-வின் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். சந்தோஷ்குமார் தொகுதிக்குப் புதியவர் என்பது மைனஸ். கடந்த ஆறு மாதங்களாக சுற்றிச் சுழன்று பணியாற்றிவருவதால் செல்வாக்கு அதிகரித்திருப்பது, வசந்தம் கார்த்திகேயனுக்கு ப்ளஸ். அ.ம.மு.க சார்பில் களமிறங்கியிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ சிவராஜின் மகன் பிரபு ஓரளவுக்கு அ.தி.மு.க வாக்குகளைப் பெறுவார் என்பதால், வசந்தம் கார்த்திகேயன் முந்துகிறார்.

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ உதயசூரியன், பா.ம.க-வின் டாக்டர் இராஜா ஆகியோர் மோதுகிறார்கள். தொகுதியில் நல்ல அறிமுகம் இருப்பது இராஜாவுக்கு ப்ளஸ். தொகுதியில் அ.தி.மு.க மீதுள்ள அதிருப்தி, பா.ஜ.க எதிர்ப்பு அலை போன்றவை சாதகமாக இருப்பதால், சங்கராபுரத்தை உதயசூரியன் தக்கவைக்கிறார்.

கள்ளக்குறிச்சி (தனி)

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வின் செந்தில்குமார், காங்கிரஸ் கட்சியின் கே.ஐ.மணிரத்தினம் ஆகியோர் மோதுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் செந்தில்குமாருக்கு மாவட்டச் செயலாளர் குமரகுரு கைகொடுப்பது ப்ளஸ். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் உட்கட்சிப்பூசல் மைனஸ். பணபலம், கூட்டணி பலம், தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு ஆகியவை சாதகமாக இருப்பதால் மணிரத்தினம் முந்துகிறார்.

செஞ்சி

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வின் ராஜேந்திரனும், தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தானும் மோதுகிறார்கள். பா.ம.க., தி.மு.க வேட்பாளர்கள் இடையே போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் ராஜேந்திரனுக்கு மைனஸ். தொகுதியில் நல்ல அறிமுகம், எளிமையான அணுகுமுறை, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு, சிறுபான்மையினரின் ஆதரவு ஆகியவற்றால் செஞ்சியைத் தக்கவைக்கிறார் மஸ்தான்.

மயிலம்

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சார்பில் சிவக்குமாரும், தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ இரா.மாசிலாமணியும் போட்டியிடுகின்றனர். பா.ம.க வாக்குவங்கியும், அ.தி.மு.க கட்சியினரின் ஒத்துழைப்பும் இருப்பது சிவக்குமாருக்கு ப்ளஸ். தொகுதி முழுவதும் நன்றாக வேலை பார்த்திருப்பது, எளிமையான அணுகுமுறை, மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தது, கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றால் மயிலத்தைத் தக்கவைக்கிறார் மாசிலாமணி.

திண்டிவனம் (தனி)

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அர்ஜுனனும், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சீத்தாபதி சொக்கலிங்கமும் களத்தில் உள்ளனர். கடந்த தேர்தலில் வெறும் 101 வாக்குகளில்தான் அ.தி.மு.க தோற்றது. அதனால் இப்போது தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியில் பெரிதாக வேலை செய்யாததால், சீத்தாபதி சொக்கலிங்கம் மீது நிலவும் அதிருப்தி அவருக்கு மைனஸ். புதுமுக வேட்பாளராக இருந்தாலும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவு, அ.தி.மு.க., பா.ம.க வாக்குவங்கி ஆகியவற்றால் முந்துகிறார் அர்ஜுனன்.

வானூர் (தனி)

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ சக்ரபாணி, தி.மு.க கூட்டணியில் வி.சி.க சார்பில் வன்னியரசு களம்காண்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தைத் தவிர்த்து, தனிச்சின்னத்தில் போட்டியிடுவது வன்னியரசுவுக்கு மைனஸ். அ.தி.மு.க-வின் நிலையான வாக்குவங்கி, தொகுதியில் செய்துள்ள மக்கள் பணிகள் சக்ரபாணிக்குக் கைகொடுக்கின்றன. வானூரைத் தக்கவைக்கிறார் சக்ரபாணி.

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான சி.வி.சண்முகமும், தி.மு.க-வின் ஆர்.லட்சுமணனும் போட்டியிடுகிறார்கள். கட்சி மாறி வந்தவர் என்ற இமேஜ் உட்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது, லட்சுமணனுக்கு மைனஸ். பா.ம.க-வின் கணிசமான வாக்குவங்கி சண்முகத்துக்கு ப்ளஸ். பணபலம், வாக்குவங்கி ஆகியவற்றில் சமபலத்துடன் மோதினாலும், தொகுதியைத் தக்கவைக்கிறார் சி.வி.சண்முகம்.

விக்கிரவாண்டி

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ முத்தமிழ்செல்வனும், தி.மு.க-வில் நா.புகழேந்தியும் களம்காண்கின்றனர். பணபலத்தில் முத்தமிழ்செல்வனோடு போட்டிபோட முடியாமல் தவிப்பதும், முன்னாள் அமைச்சர் பொன்முடி கைவிட்டிருப்பதும் புகழேந்திக்கு மைனஸ். சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள் புகழேந்திக்கு ப்ளஸ். அ.தி.மு.க மற்றும் பா.ம.க வாக்குவங்கி முத்தமிழ்செல்வனுக்கு ப்ளஸ். பணபலம் மற்றும் புகழேந்தியின் மைனஸ்களால் தொகுதியைத் தக்கவைக்கிறார் முத்தமிழ்செல்வன்.

திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி - விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வில் வி.ஏ.டி.கலிவரதன் தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பொன்முடி போட்டியிடுகிறார்கள். கலிவரதன் மீதான பாலியல் புகார் சர்ச்சை, பா.ம.க-வினரின் ஒத்துழைப்பின்மை ஆகியவை இவருக்கு மைனஸ். தொகுதி மக்கள் மற்றும் சொந்தக் கட்சியில் செல்வாக்கு, மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தது, தனது சமூகம் சார்ந்த கணிசமான வாக்குகள் சிதறாமல் கிடைப்பது பொன்முடிக்கு ப்ளஸ். இதனால், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தொகுதியைத் தக்கவைக்கிறார் பொன்முடி.

அடுத்த கட்டுரைக்கு