Published:Updated:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சேகர், கேஎஸ் மூர்த்தி
சேகர், கேஎஸ் மூர்த்தி

இரட்டை இலைமீது பாசம் காட்டும் வாக்காளர்கள் நிறைந்த தொகுதி என்பது முத்துக்குமாருக்கு ப்ளஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ராசிபுரம் (தனி)

அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான சரோஜா, தி.மு.க சார்பில் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதிகாரபலம், பணபலம், தொகுதியில் நல்ல அறிமுகம் ஆகியவை சரோஜாவுக்கு ப்ளஸ். மதிவேந்தன் புதுமுகமாக இருந்தாலும், அவருடைய தந்தை மாயவன் தொகுதியில் பிரபலமானவர் என்பது இவருக்கு ப்ளஸ். ‘தொகுதிக்குப் பெரிதாக சரோஜா எதையும் செய்யவில்லை’ என்ற அதிருப்தி நிலை பரவலாக இருப்பதால், மதிவேந்தன் முந்துகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

சேந்தமங்கலம் (தனி)

.தி.மு.க சார்பில் எஸ்.சந்திரன், தி.மு.க சார்பில் பொன்னுச்சாமி ஆகியோர் களத்திலிருக்கிறார்கள். கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றவர் என்பதால், தொகுதியில் பரிச்சயமாக இருப்பது, இறங்கி வேலை செய்வதால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருப்பது ஆகியவை பொன்னுச்சாமிக்கு ப்ளஸ். தொகுதியில் பரிச்சயம் இல்லாமலிருப்பது, சந்திரனுக்கு மைனஸ். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ சந்திரசேகரன், அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிடுவதும் சந்திரனுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். அதனால், பொன்னுச்சாமி முந்துகிறார்.

நாமக்கல்

சிட்டிங் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் அ.தி.மு.க சார்பிலும், பி.இராமலிங்கம் தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தும், தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்ற குரல் ஒலிப்பது பாஸ்கருக்கு மைனஸ். தி.மு.க-வுக்குள் இருக்கும் உட்கட்சி கோஷ்டிப்பூசல் இராமலிங்கத்துக்கு மைனஸ். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் வெறித்தனமாக வேலை செய்வதால், கட்சியினரின் ஆதரவோடு பாஸ்கர் முந்துகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பரமத்திவேலூர்

சிட்டிங் எம்.எல்.ஏ கே.எஸ்.மூர்த்தி தி.மு.க சார்பிலும், புதுமுக வேட்பாளர் இன்ஜினீயர் சேகர் அ.தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். கே.எஸ்.மூர்த்திக்கு தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு ப்ளஸ். தொகுதியில், பா.ம.க-வுக்கு கணிசமான வாக்குவங்கி இருந்தாலும், அந்தக் கட்சியினர் இரு கோஷ்டியாக இருக்கிறார்கள். அவர்களில் ஒரு கோஷ்டியினர் அ.தி.மு.க-வை எதிர்ப்பது, சேகருக்கு மைனஸ். இருவருமே தொகுதியில் அதிகமாக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பணபலத்திலும் சமமாக இருக்கிறார்கள். எனவே, இழுபறிநிலைதான்!

திருச்செங்கோடு

அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி, தி.மு.க கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் மோதுகிறார்கள். இருவருமே தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் பணபலமும் உள்ளவர்கள் என்பதால், சமபலத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் உள்ளடி வேலைகள் நடப்பது பொன்.சரஸ்வதிக்கு மைனஸ். தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லாதது, ஈஸ்வரனுக்கு மைனஸ். இருந்தாலும், தொகுதியில் சரஸ்வதி மீது பரவலாக இருக்கும் அதிருப்தியால் ஈஸ்வரன் முந்துகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

குமாரபாளையம்

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான தங்கமணி, தி.மு.க-வில் வெங்கடாசலம் ஆகியோர் களம்காண்கிறார்கள். வெங்கடாசலம் புதுமுகம் என்பதால் தொகுதியில் அறிமுகம் இல்லை என்பது மைனஸ். தங்கமணி தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். தொகுதி மக்கள் மத்தியிலும் பெரிதாக அதிருப்தி இல்லை. கட்சி செல்வாக்கு, பணபலம், அதிகாரபலம் காரணமாகத் தொகுதியை தங்கமணியே தக்கவைப்பார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு