Election bannerElection banner
Published:Updated:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

மகேந்திரன், ஜெயராமகிருஷ்ணன்
மகேந்திரன், ஜெயராமகிருஷ்ணன்

ஜெயராமகிருஷ்ணன் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லாமல் இருப்பதும் சாதகமாக இருப்பதால், மடத்துக்குளத்தில் மீண்டும் சூரியன் உதிக்கிறது.

அவிநாசி (தனி)

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், சபாநாயகருமான ப.தனபால், தி.மு.க கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதியமான் தொகுதிக்குப் புதியவர் என்பது மைனஸாக இருந்தாலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ப்ளஸ். பொதுவாகவே இந்தத் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கான தொகுதி என்பது தனபாலுக்கு ப்ளஸ். அவிநாசியைத் தக்கவைக்கிறார் தனபால்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தாராபுரம் (தனி)

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், தி.மு.க-வின் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மோதுகிறார்கள். தொகுதியில் பெருவாரியாக இருக்கும் அருந்ததியர் சமூக ஓட்டுகள் முருகனுக்கு ப்ளஸ். தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லாதது கயல்விழிக்கு மைனஸாக இருந்தாலும், தொகுதி முழுவதுமுள்ள பா.ஜ.க எதிர்ப்பலை, சிறுபான்மையினரின் ஓட்டுகள் ஆகியவை சாதகமாக இருப்பதால், கயல்விழி முந்துகிறார்.

காங்கேயம்

அ.தி.மு.க-வின் ஏ.எஸ்.ராமலிங்கம், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மோதுகிறார்கள். ராமலிங்கம் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பது அவருக்கு ப்ளஸ். அ.தி.மு.க-விலுள்ள கோஷ்டிப்பூசல் ராமலிங்கத்துக்கு மைனஸ். கொரோனா காலத்திலிருந்து தொகுதிக்குள் களப்பணியாற்றி வருவதால் கிடைத்திருக்கும் நற்பெயர் சாமிநாதனுக்கு ப்ளஸ். இரு கட்சிகளும் சம பலத்தில் இருப்பதால், இழுபறிநிலைதான்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

மடத்துக்குளம்

தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன், அ.தி.மு.க-வின் சி.மகேந்திரன், அ.ம.மு.க-வின் சண்முகவேலு போட்டியிடுகிறார்கள். மூவருமே தொகுதியில் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதோடு, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க-வின் ஓட்டுகளை சண்முகவேலு பிரிப்பதாலும், ஜெயராமகிருஷ்ணன் மீது பெரிய அளவில் அதிருப்தி இல்லாமல் இருப்பதும் சாதகமாக இருப்பதால், மடத்துக்குளத்தில் மீண்டும் சூரியன் உதிக்கிறது.

பல்லடம்

அ.தி.மு.க-வின் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ம.தி.மு.க-வின் முத்துரத்தினம் ஆகியோர் மோதுகிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ப்ளஸ் என்றாலும், தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லாதது முத்துரத்தினத்துக்கு மைனஸ். சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ நடராஜனை ஆனந்தன் சரிக்கட்டிவிட்டதால், அதிருப்தியிலிருந்தவர்கள் ஆனந்தனுக்காக உழைக்க ஆரம்பித்திருப்பது ப்ளஸ். அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கான தொகுதி என்பதால், ஆனந்தன் முந்துகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

திருப்பூர் - வடக்கு

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ விஜயகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ரவி ஆகியோர் மோதுகிறார்கள். தொகுதி மக்களிடையே நிலவும் நல் அபிமானமும், தீவிரமான பிரசாரமும் விஜயகுமாருக்கு ப்ளஸ். தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாலும், தி.மு.க கூட்டணியிலுள்ள கட்சிகளின் சுணக்கமான செயல்பாடுகளாலும் திருப்பூர் வடக்கைத் தக்கவைக்கிறார் விஜயகுமார்.

திருப்பூர் - தெற்கு

அ.தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ குணசேகரன், தி.மு.க சார்பில் செல்வராஜ் ஆகியோர் மோதுகிறார்கள். தொகுதிக்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்ற மக்களின் அதிருப்தி நிலை குணசேகரனுக்கு மைனஸ். தொகுதியில் கணிசமாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகள், மாவட்டச் செயலாளர் என்பதால் கட்சியினரின் ஒத்துழைப்பு, கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றால் செல்வராஜ் முந்துகிறார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

உடுமலைப்பேட்டை

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் தென்னரசு ஆகியோர் களத்திலிருக்கிறார்கள். தி.மு.க ஓரளவுக்கு வலுவாக இருக்கும் இந்தத் தொகுதியில், செல்வாக்கு இல்லாத காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால், தி.மு.க-வினர் ஒத்துழைப்பு தராதது தென்னரசுவுக்கு மைனஸ். உடுமலைப்பேட்டையைத் தக்கவைக்கிறார் ராதாகிருஷ்ணன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு