Published:Updated:

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

வேலுமணி, கார்த்திகேய சிவசேனாபதி
வேலுமணி, கார்த்திகேய சிவசேனாபதி

கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தொண்டாமுத்தூரைத் தக்கவைக்கிறார் வேலுமணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உதகமண்டலம்

பா.ஜ.க-வில் போஜராஜ், காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏ கணேஷ் மோதுகிறார்கள். போஜராஜ் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாதவர் என்பதும், சீட் கிடைக்காத அதிருப்தியில் மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சுயேச்சையாகப் போட்டியிடுவதும் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு.
நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

இவையெல்லாம் தற்போது மூன்றாவது முறையாகக் களம்காணும் கணேஷுக்கு சாதகமாக இருப்பதால், உதகமண்டலத்தைத் தக்கவைக்கிறார் கணேஷ்.

கூடலூர் (தனி)

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் பொன்.ஜெயசீலனும், தி.மு.க-வில் காசிலிங்கமும் போட்டியிடுகிறார்கள். இருவருமே தாயகம் திரும்பிய தமிழர்கள் என்பதால், இருவருக்குமே தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தி.மு.க வெற்றிபெற்ற தொகுதி இது. தி.மு.க மற்றும் இடதுசாரிகளின் வாக்குவங்கியுடன் சிறுபான்மையினரின் வாக்குகளும் தி.மு.க-வுக்குத்தான் கிடைக்கும் என்பதால் காசிலிங்கம் முந்துகிறார்.

குன்னூர்

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் வினோத், தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் களத்திலிருக்கிறார்கள். தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பது ராமச்சந்திரனுக்கு ப்ளஸ். வினோத், தொகுதிக்கு அறிமுகமே இல்லாத புதுமுக வேட்பாளர் என்பதும், புதிதாகக் கட்சிப் பதவிக்கு வந்ததால், அ.தி.மு.க-வினரின் உள்ளடி வேலைகளும் அவருக்கு மைனஸ். போதாக்குறைக்குத் தொகுதியில் அ.ம.மு.க வேட்பாளர் கலைச்செல்வன் பிரிக்கும் ஓட்டுகளும் அவருக்குச் சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் ராமச்சந்திரன் முந்துகிறார்.

கோவை - தெற்கு

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ம.நீ.ம-வில் கமல்ஹாசன், பா.ஜ.க-வில் வானதி சீனிவாசன், காங்கிரஸில் மயூரா ஜெயக்குமார் களத்திலிருப்பதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. கமல் போட்டியிடுவதால், மற்ற இரு வேட்பாளர்களும் சற்றே பதறுகிறார்கள். வானதி தொடர்ந்து களப்பணியில் இருப்பது அவருக்கு ப்ளஸ். மயூரா ஜெயக்குமார் பிரசாரத்துக்குக்கூட பெரிதாகத் தொகுதிக்குள் வரவில்லை என்பது அவருக்கு மைனஸ். வாக்காளர்கள் மத்தியில் இருக்கும் அமோக வரவேற்பு கமலுக்கு ப்ளஸ். கூட்டணிக் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க இரண்டுமே தொகுதியைக் கைவிட்டுவிட்டதால், கமல்தான் முந்துகிறார்.

கோவை - வடக்கு

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அம்மன் அர்ச்சுணன், தி.மு.க-வில் சண்முகசுந்தரம் மோதுகிறார்கள். கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு அதே தொகுதி கிடைக்காததால், அதிருப்தியில் இருக்கிறார். கோவை வடக்குத் தொகுதியை எதிர்பார்த்திருந்த அ.தி.மு.க-வின் சந்திரசேகருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதால் அவரும் ஆர்வம் காட்டவில்லை. வாக்காளர்கள் மத்தியிலும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. இவையெல்லாம் அ.தி.மு.க-வுக்கு மைனஸ். ம.நீ.ம வேட்பாளர் தங்கவேலு, நாம் தமிழர் கட்சியின் பாலேந்திரன் ஆகியோருக்கும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. இந்த விஷயங்கள் அனைத்தும் தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், சண்முகசுந்தரம் முந்துகிறார்.

தொண்டாமுத்தூர்

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அமைச்சர் வேலுமணி, தி.மு.க-வில் கார்த்திகேய சிவசேனாபதி நேரடியாகப் போட்டியிடுகிறார்கள். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பதால், தொகுதியில் கணிசமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்பது வேலுமணிக்கு மைனஸ். சிவசேனாபதி தொகுதிக்குப் புதியவர் என்பது அவருக்கு மைனஸ். தொகுதி மக்களின் நல்லது, கெட்டதுகளில் பங்கேற்பது, தொகுதியில் திட்டப்பணிகளை நிறைவேற்றியது இவையெல்லாம் வேலுமணிக்கு ப்ளஸ். கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தொண்டாமுத்தூரைத் தக்கவைக்கிறார் வேலுமணி.

சிங்காநல்லூர்

அ.தி.மு.க-வில் ஜெயராம், தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்திக், ம.நீ.ம-வில் மகேந்திரன் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மகேந்திரன் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததால், மற்ற இரு வேட்பாளர்களும் சற்றுப் பதற்றத்துடன் இருக்கிறார்கள். ஜெயராம் கொரோனா காலத்திலிருந்தே சிங்காநல்லூரில் பணியாற்றினாலும், அவருக்குத் தொகுதிக்குள் சொல்லிக்கொள்ளும்படி பரிச்சயம் இல்லை. தொகுதிக்குப் பெரிதாக பணிகள் செய்யவில்லை என்கிற அதிருப்தி கார்த்திக்குக்கு மைனஸ். ஆனாலும், தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் நாயுடு சமூகத்தினரின் ஓட்டுகள், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு ஆகியவற்றால் கார்த்திக் முந்துகிறார்.

சூலூர்

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ கந்தசாமி, தி.மு.க கூட்டணியில் கொ.ம.தே.க சார்பில் பிரீமியர் செல்வம் போட்டியிடுகிறார்கள். கடந்த 2019-ல் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற கந்தசாமியின் எளிமை குணம் அவருக்கு ப்ளஸ். பிரீமியர் செல்வத்துக்கு தொகுதிக்குள் பரிச்சயம் இல்லாதது அவருக்கு மைனஸ். ரேஸில் முந்துகிறார் கந்தசாமி.

பொள்ளாச்சி

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனும், தி.மு.க-வில் டாக்டர் வரதராஜனும் மோதுகின்றனர். பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக்கும் கோரிக்கையை ஜெயராமனால் நிறைவேற்ற முடியாததால், தொகுதிக்குள் அதிருப்தி நிலவுகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தாலும் மக்கள் கொதிப்பில் உள்ளனர். இவையெல்லாம் ஆளுங்கட்சிக்கு மைனஸ். இவையெல்லாமே தி.மு.க-வுக்குச் சாதகம் என்பதால் வரதராஜன் முந்துகிறார்.

கிணத்துக்கடவு

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், தி.மு.க-வில் கடந்தமுறை போட்டியிட்ட குறிச்சி பிரபாகரன் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் 1,332 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பிரபாகரன் தோற்றார். ஆரம்பத்தில் இருவரும் சமபலத்துடன் மோதினாலும், போகப்போகப் போட்டி வலுத்துவருகிறது. தாமோதரன் தொகுதியில் செல்வாக்கோடு வலம்வந்தாலும் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்தி, பிரபாகரனுக்குச் சாதகமாக இருப்பதால், அவரே முந்துகிறார்.

மேட்டுப்பாளையம்

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

ற்கெனவே எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவிகளை வகித்திருக்கும் ஏ.கே.செல்வராஜ் அ.தி.மு.க சார்பிலும், டி.ஆர்.சண்முகசுந்தரம் தி.மு.க சார்பிலும் போட்டியிடுகிறார்கள். ஊருக்குள் ஓடும் பவானி ஆற்றின் குடிநீர் சொந்தத் தொகுதி மக்களுக்கே கிடைக்காததால், `அ.தி.மு.க-வின் கோட்டை’ என்ற பெயரைத் தாண்டியும் ஆளுங்கட்சி மீது அதிருப்தி தொனிக்கிறது. இது செல்வராஜுக்கு மைனஸ். அதேசமயம், கடந்த சில ஆண்டுகளாகத் தொகுதிக்குள் செய்த களப்பணிகளும், கணிசமான இஸ்லாமியர் வாக்குகளும் கைகொடுப்பதால் சண்முகசுந்தரம் முந்துகிறார்.

வால்பாறை (தனி)

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அமுல் கந்தசாமி, சி.பி.ஐ-யில் முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம் மோதுகிறார்கள். ஆறுமுகத்தின் மீது வாக்காளர்கள் மத்தியில் உள்ள அதிருப்தி அவருக்கு மைனஸ். அமுல் கந்தசாமி வேறு தொகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தொகுதிக்குள் பரிச்சயம் இல்லாதது அவருக்கு மைனஸ். வால்பாறை மலைப்பகுதியில் தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். அதேநேரத்தில் சமவெளிப்பகுதியில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு அதிகம். இருவருமே சமபலத்தில் இருப்பதால், இழுபறி நீடிக்கிறது.

கவுண்டம்பாளையம்

நீலகிரி - கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகள்: 2021- சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

அ.தி.மு.க-வில் அருண்குமாரும், தி.மு.க-வில் பையா என்கிற கிருஷ்ணனும், ம.நீ.ம சார்பில் சுரபி பங்கஜும் போட்டியிடுகிறார்கள். தொகுதி மாறிப் போட்டியிட்டாலும், ஏற்கெனவே பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவராக இருந்ததால், தொகுதிக்குள் உள்ள பரிச்சயம் அருண்குமாருக்கு ப்ளஸ். கிருஷ்ணன், 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும், தொகுதியில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருக்கிறார் என்பது அவருக்கு ப்ளஸ். அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ஆறுக்குட்டிக்கு சீட் கிடைக்காததால், அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பது ஆளுங்கட்சிக்கு மைனஸ். ரேஸில் முந்துகிறார் கிருஷ்ணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு