Published:Updated:

மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது!

விகடன் விமர்சனக்குழு
மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது!

போபால்: மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 11 ஆம் தேதியும், 19 ஆம் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இதையடுத்து, மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கு நாளை (25 ஆம் தேதி) தேர்தல் நடக்கிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. 3 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதலமைச்சராக உள்ளார். இவர் முதலமைச்சர் ஆனதும் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இது மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது. தற்போது சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

##~~##
மத்தியபிரதேசம், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான திக்விஜய்சிங்கின் சொந்த மாநிலம் ஆகும். ஏற்கனவே அவர் 1993 முதல் 2003 வரை மத்தியபிரதேச மாநில முதலமைச்சராக இந்த முறை அவர் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், காங்கிரசின் பிரச்சாரத்தை வழி நடத்திச் சென்றார்.
மிசோரம் மாநில முதலமைச்சராக லால் தங்கவ்லா 5 முறை இருந்து வருகிறார். இங்கு மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளது. 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.86 லட்சம் பேர். இதில் பெண்கள் 3.49 லட்சம் பேர்.
ஆளும் காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மிசோரம் தேசிய கட்சி 38 தொகுதியிலும், மிசோ தேசிய முன்னணி கட்சி 31 தொகுதியிலும், மிசோ மக்கள் மாநாட்டு கட்சி 8 தொகுதியில் போட்டியிடுகின்றன.
இந்த இரு மாநிலங்களிலும், நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. ஓட்டுப் பதிவையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.