Published:Updated:

லாலு தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராப்ரி தேவி

Vikatan Correspondent
லாலு தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராப்ரி தேவி
லாலு தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராப்ரி தேவி
லாலு தேர்தலில் போட்டியிட மாட்டார்: ராப்ரி தேவி

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் போட்டியிட மாட்டார் என அவரது மனைவி ராப்ரி தேவி கூறியுள்ளார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

##~~##
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய லாலுவின் மனைவி ராப்ரி தேவி, ''உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். லாலு பிரசாத் யாதவ் குற்றமற்றவர். அவருக்கு எதிரான அரசியல் சதியினால் அவர் சிக்க வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லாலு பிரசாத் யாதவ் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்வார்'' என்றார்.