Published:Updated:

தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஜூன் 11,2011

தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதையும், சுமார் 30 லட்சம் வாக்குகளை பெற்றதையும் அடுத்து, அக்கட்சியை அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ##~~##

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கை:

19.5.2011 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு அங்கீகாரம் கோரி கடிதம் அனுப்பப்பட்டது.

நடந்து முடிந்த தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றதையும், சுமார் 30 லட்சம் வாக்குகள் பெற்றதையும் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

1968-ம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் ஒப்படைப்பு ஆணையின்படி ஒரு மாநில கட்சி அங்கீகாரம் பெறுவதற்குரிய தகுதிகளை தேமுதிக பெற்றுள்ளதால் இந்த அங்கீகாரம் கோரப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் அந்த கடிதத்தை முறையாகப் பரிசீலித்து தேமுதிகவுக்கு அங்கீகாரம் வழங்கி 10.6.2011 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி தேமுதிக தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகவும், அதற்கு முரசு சின்னம் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் கழகத் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.