Published:Updated:

பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம்

Vikatan Correspondent
பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு:  தேர்தல் ஆணையம்
பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம்
பிப்ரவரியில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு:  தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு, வருகிற பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ். பிரம்மா, கடந்த 2009 ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றதாகவும், ஆனால் இந்த முறை 6 கட்டங்களாக நடைபெறலாம் என்று கூறினார்.

இருப்பினும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, நாடு முழுவதும் உள்ள நிலைமைகளை அறிந்துகொண்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம் தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், அவை முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

##~~##

 கருத்துக் கணிப்பை தடை செய்யப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் கூறினார்,