Published:Updated:

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

Vikatan Correspondent
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பில், ''நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜனவரி 21ல் தொடங்குகிறது. ஜனவரி 28ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள், மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 31'' எனக் கூறப்பட்டுள்ளது.

##~~##
தமிழகத்தில் ஜெயந்தி நடராஜன், டி.கே.ரங்கராஜன், வாசன், பாலகங்கா, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகியோரது பதவி காலம் ஏப்.2ல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.