Published:Updated:

லோக்பால் தலைவர் நியமன பிரச்னை: ஜனாதிபதியுடன் சுஷ்மா சந்திப்பு!

விகடன் விமர்சனக்குழு
 லோக்பால் தலைவர் நியமன பிரச்னை: ஜனாதிபதியுடன் சுஷ்மா சந்திப்பு!
லோக்பால் தலைவர் நியமன பிரச்னை: ஜனாதிபதியுடன் சுஷ்மா சந்திப்பு!
 லோக்பால் தலைவர் நியமன பிரச்னை: ஜனாதிபதியுடன் சுஷ்மா சந்திப்பு!

புதுடெல்லி: லோக்பால் தலைவர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி பிரணாப்

 லோக்பால் தலைவர் நியமன பிரச்னை: ஜனாதிபதியுடன் சுஷ்மா சந்திப்பு!

முகர்ஜியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று திடீரென சந்தித்துப்பேசினார். 

ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகி உள்ளது. இந்த சட்டத்தின்கீழ் தேசிய அளவில் லோக்பால் அமைக்கப்படுகிறது.

இதில் ஒரு தலைவரும், அதிகபட்சமாக 8 உறுப்பினர்களும் இடம் பெறுவார்கள். 8 உறுப்பினர்களில் 4 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாகவும், மற்றவர்கள் நீதித்துறை சேராதவர்களாகவும் இருப்பார்கள்.

இந்நிலையில், லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு வரும் 7 ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து மத்திய அரசு விண்ணப்பங்களை கோரி உள்ளது. இந்த நிலையில், தேர்வுக்குழுவில் 5 ஆவது உறுப்பினராக மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவை நியமிக்க பிரதமர் மன்மோகன் சிங் பரிந்த்துரைத்துள்ளார்.

இதனிடையே டெல்லியில் நேற்று முன்தினம் இரவு தேர்வுக்குழு கூடி, 5 ஆவது உறுப்பினர் நியமனம் பற்றி விவாதித்தபோது, அதில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், .பி.ராவை நியமனம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

##~~##
இந்த நிலையில், சுஷ்மா இன்று இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராவை லோக்பால் தலைவராக நியமிப்பதற்கு பா.ஜனதா ஜனதாவின் எதிர்ப்பை பதிவு செய்தார்.