Published:Updated:

வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பு உயர்வு: மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்!

Vikatan Correspondent
வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பு உயர்வு: மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்!
வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பு உயர்வு: மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்!
வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பு உயர்வு: மத்திய அரசுக்கு மம்தா கண்டனம்!

புதுடெல்லி: வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பை  உயர்த்த ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பார்னஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில், பெரிய மாநிலங்களில் வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பினை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்தும் தேர்தல் கமிஷனின் முடிவுக்கு, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.

இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் தளத்தில், ''வேட்பாளர் தேர்தல் செலவு வரம்பினை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவு எனக்கு ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தேர்தல் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது.

மத்திய அரசு தேர்தல் செலவு வரம்பினை உயர்த்தியுள்ளது முதலாளித்துவத்திற்கு உதவும். பணம் அதிகம் கொண்டுள்ள பெரிய கட்சிகள் கோடிக்கணக்கான பணத்தினை தேர்தலுக்காக செலவு செய்ய முடியும். எங்களை போன்ற ஏழ்மை நிலையில் உள்ள கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும். மத்திய அரசின் இந்த முடிவு ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு மேலும், மேலும் ஊக்கம் அளிக்கும். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.