Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குபதிவு நாளை தொடக்கம்!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குபதிவு நாளை தொடக்கம்!
நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குபதிவு நாளை தொடக்கம்!
நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குபதிவு நாளை தொடக்கம்!

புதுடெல்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளில் நாளை தொடங்குகிறது.

543 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு நாளை முதல் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, முதல் கட்டமாக அசாம் மாநிலத்தில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாமில், காங்கிரஸ், பாரதிய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், அசாம் கனபரிஷத், ஆம் ஆத்மி கட்சி என பல்வேறு கட்சிகள் களத்தில் இருப்பதால், அங்கு பல முனைப்போட்டி நிலவுகிறது.

இந்த 5 தொகுதிகளில் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உல்ஃபா தீவிரவாதிகளின் மிரட்டல் எதுவும் இல்லாததால் இம்முறை தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பப்படுகிறது. அசாமில், முதல்கட்ட தேர்தலுக்காக 8 ஆயிரத்து 588 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த 235 கம்பெனி படைகள் அசாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. திரிபுரவில் உள்ள இரண்டு மக்களவை தொகுதிகளில், ஒன்றான திரிபுரா மேற்கு தொகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.