Published:Updated:

நாடாளுமன்றம்-சட்டமன்றத் தேர்தல்: பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்குதேசம் இணைந்தது!

Vikatan Correspondent

ஐதராபாத்: ஆந்திர மாநில நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்குதேசம் இணைந்தது.

ஆந்திராவில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் உள்ளூர் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டதை பா.ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இன்று கூட்டாக அறிவித்தனர்.

அப்போது சந்திரபாபு நாயுடு கூறும்போது, தெலங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்ற தொகுதியில் 8 தொகுதியும், 119 சட்டசபை தொகுதிகளில் 47 தொகுதியும் பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சீமாந்திராவில் மொத்தம் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதியில் 5 தொகுதியும், 175 சட்டமன்ற தொகுதியில் 15 தொகுதியும் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியை கொண்டு வந்தவர் மோடி. மதம், பிராந்தியம் மற்றும் சமூகம் எதுவாக இருந்தாலும் மோடியை ஆதரிக்க வேண்டும். நமது நோக்கம் எல்லாம் காங்கிரஸ் இல்லாத, ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான்" என்றார்.