Published:Updated:

ம.ம.க. வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு!

விகடன் விமர்சனக்குழு
ம.ம.க. வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு!
ம.ம.க. வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு!
ம.ம.க. வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு!

மயிலாடுதுறை: மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி. இவர், உள்ளூர் பிரமுகர் ஒருவரின் திருமணப் பத்திரிகையில் பெயருடன் எம்.பி. என அச்சிட்டு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை தொகுதி ம.ம.க. வேட்பாளர் ஹைதர் அலி மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதேபோல், திருமணப் பத்திரிகை அச்சிட்ட அஷ்ரப், அச்சக உரிமையாளர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.