Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் புதிய சாதனை: இதுவரை 66.27% பதிவாகியுள்ளது!

Vikatan Correspondent

புதுடெல்லி: இந்திய வரலாற்றில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் அதிகபட்சமாக 66.27 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 30 மாநிலங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுவரை 502 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்திருப்பதாகவும் அதில், 66.27 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 64 சதவிகித வாக்குகள் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது.

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களில், ஆண்களைவிட பெண்களே அதிகளவு வாக்களித்தாகவும், அதிகபட்சமாக ஆந்திராவில் 73.46 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.