Published:Updated:

நாடாளுமன்ற தேர்தல்: மறு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம்!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தல்: மறு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தல்: மறு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம்!
நாடாளுமன்ற தேர்தல்: மறு வாக்குப்பதிவு தேதியில் மாற்றம்!

சென்னை: தமிழகத்தின் 2 வாக்குச்சாவடிகளில் நாளை நடக்கவிருந்த மறு வாக்குப்பதிவு, 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி 213வது வாக்குச்சாவடி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி 37வது வாக்குச்சாவடி கோட்டப்பாலையத்திலும் மே 8 அன்று மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அந்த இரண்டு வாக்குச்சாவடிகளிலும் நாளைக்கு பதில் வருகின்ற 10 ஆம் தேதி அன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.