Published:Updated:

ராகுலுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் கரிசனம்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

Vikatan Correspondent
ராகுலுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் கரிசனம்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
ராகுலுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் கரிசனம்: பா.ஜ.க. குற்றச்சாட்டு
ராகுலுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் கரிசனம்: பா.ஜ.க. குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் விதி மீறலில் ராகுல் காந்திக்கு மட்டும் தேர்தல் கமிஷன் கரிசனம் காட்டி உள்ளது என பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கைய்யா நாயுடு கூறுகையில், ''தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரின் காரணமாக, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது.

ஆனால், பலமுறை தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள ராகுல் காந்தி மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் விதி மீறலில், ராகுல் காந்திக்கு மட்டும் தேர்தல் கமிஷன் கரிசனம் காட்டி உள்ளது.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இதுவரை நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். அவர் கலந்து கொண்ட எந்த கூட்டத்திலும், சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. ஆனால், வாரணாசியில் மோடி கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும், மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் அகிலேஷ் மற்றும் கெஜ்ரிவால் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஒரு மாநில முதல்வரான நரேந்திர மோடி கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஜனாநாயகத்திற்கு அனுமதி மறுத்தது போன்றதாகும்'' என்றார்.