Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலில் 66.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை!

விகடன் விமர்சனக்குழு
நாடாளுமன்ற தேர்தலில் 66.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை!
நாடாளுமன்ற தேர்தலில் 66.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை!
நாடாளுமன்ற தேர்தலில் 66.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை!

புதுடெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் 66.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் 16வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 9 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மிக நீண்ட காலமாக நடந்தாலும், அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்த தேர்தலில், ஒட்டு மொத்தமாக 66.38 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாடாளும்னற தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது, சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்த தேர்தலில் ஏராளமான புதிய வாக்காளர்கள் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அதிக அளவாக, கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.  இதற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 58.19 சதவிகித வாக்குகளே பதிவாகி இருந்தது.