Published:Updated:

மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தக்கோரி நாளை இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தில் 17 தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தக்கோரி நாளை (14ஆம் தேதி) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மேற்கு வங்காளத்தில் கடந்த 12 ஆம் தேதி 17 தொகுதிகளுக்கு இறுதி கட்டத்தேர்தல் நடந்தது. அப்போது பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், இடதுசாரி கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேரும், ஆயுத தாக்குதலில் 17 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், கடைசி கட்ட தேர்தலின்போது பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு நடந்ததாகவும், இதனை தேர்தல் கமிஷனும், மாநில காவல்துறையும் தடுக்க தவறிவிட்டதாகவும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்நிலையில், இறுதி கட்ட தேர்தல் நடந்த 17 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்தக்கோரி நாளை (14ஆம் தேதி) நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.