Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல்! -பரிசுப் பொருள்கள் சர்ச்சையில் ஆளுங்கட்சி

ஆளுங்கட்சி  நிர்வாகிகள்
ஆளுங்கட்சி நிர்வாகிகள்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய ஆளுங்கட்சி மீது நீலகிரியில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சியினர் பொது மக்களுக்கு பரிசுப் பொருள்களோ அல்லது பணமோ கொடுக்க கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்
ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம்

ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் ஆளுங்கட்சியினர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்களை விநியோகம் செய்துவருவதாக புகார்கள் எழுந்தன. இதைக் கண்டித்து ஊட்டியில் தி.மு.க-‌வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், இது குறித்து அரசு அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

சாலைமறியல்
சாலைமறியல்

அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, எவர்சில்வர் தட்டு ஆகியவற்றை வழங்கிவந்ததைக் கண்டறிந்து பொருள்களைப்

பறிமுதல் செய்தனர்.

கூடலூரில் மட்டும் ரூ.3.60 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்களை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அ.தி.மு.க மீது மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பரிசுப் பொருள்கள்
பரிசுப் பொருள்கள்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, "தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்கிய சம்பந்தப்பட்ட கட்சியின் மீது மூன்று இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்பது தனிப்படைகள் அமைப்பட்டிருக்கின்றன" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு