Published:Updated:

தமிழகத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

Vikatan Correspondent
தமிழகத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழகத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழகத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2 மேயர் உள்பட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில், கோவை, தூத்துக்குடி மாநகர மேயர் பதவிகள் காலியாக உள்ளது. இதேபோல், அரக்கோணம், கடலூர், விருத்தாசலம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவிகள், 8 மாநகராட்சி உறுப்பினர் பதவிகள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்பட தமிழகத்தில் 530 உள்ளாட்சி பதவி இடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்த காலியாக உள்ள பதவிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி வரை நடைபெறும். இடைத்தேர்தலை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், அ.தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,486 பேர் களத்தில் உள்ளனர்.

இதைத்தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. இதற்கு, தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குச்சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டோ’ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பொத்தான் வசதி இல்லை. எனவே நோட்டோ பயன்படுத்த விரும்பும் வாக்காளர்கள் ‘49 ஓ’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. வருகின்ற 22 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.