Published:Updated:

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பா.ஜ.க. யோசனையை நிராகரித்தது சிவசேனா!

விகடன் விமர்சனக்குழு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் தொடர்பான பா.ஜ.க.வின் யோசனையை நிராகரித்துள்ளது சிவசேனா.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சிவசேனா-பாரதிய ஜனதா இடையே இதுவரை தொகுதிப் பங்கீடுக்கான உடன்பாடு ஏற்படவில்லை. மேலும்,  தொகுதிப் பங்கீடு தொடர்பாக பா.ஜ.க. விதித்த கெடுவை சிவசேனா நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ''எதற்காகவும் சுயமரியாதையை விட்டு கொடுக்க முடியாது" என்று கூறினார். இதனால், தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள பா.ஜ.க., தொகுதிப்பங்கீடு பற்றி சிவசேனா முடிவெடுக்க கெடு விதித்தனர்.

ஆனால், அதனை நிராகரித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ''கட்சியின் சுயமரியாதையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. மேலும், தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி பிரச்னை பற்றி கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார்" என்றார்.

இந்நிலையில், இரு கட்சிகளும் தலா 135 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற பாரதிய ஜனதாவின் யோசனையை சிவசேனா ஏற்றுக் கொள்ளாததால் கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.