Published:Updated:

மகாராஷ்ட்ரா தேர்தல்; சிவசேனாவுக்கு 151, பாஜகவுக்கு 119: உத்தவ் தாக்கரே அறிவிப்பு!

Vikatan Correspondent

மும்பை: மகாராஷ்ட்ரா தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளை அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் நீண்ட காலம் கூட்டணி கட்சிகளாக விளங்கும் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே முதல்வர் பதவி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது.

கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் தங்களுக்கு 135 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து இறுதி முடிவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதில், 151 இடங்கள் சிவசேனாவுக்கும், பா.ஜ.க.,வுக்கு 119 தொகுதிகளும், 18 தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.