Published:Updated:

நாளை வாக்கு எண்ணிக்கை: இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை-தேர்தல் கமிஷன்

Vikatan Correspondent

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2 மேயர் பதவி மற்றும் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை (22ஆம் தேதி) காலை தொடங்குகிறது.

இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 307 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் பணி தொடங்கியதில் இருந்து முடியும் வரை கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின்போது, இடையூறு ஏற்டுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.