Published:Updated:

தேர்தல் நடத்தை விதி மீறல்: மோடி மீது காங்கிரஸ் மீண்டும் புகார்!

தேர்தல் நடத்தை விதி மீறல்: மோடி மீது  காங்கிரஸ் மீண்டும் புகார்!
தேர்தல் நடத்தை விதி மீறல்: மோடி மீது காங்கிரஸ் மீண்டும் புகார்!
தேர்தல் நடத்தை விதி மீறல்: மோடி மீது  காங்கிரஸ் மீண்டும் புகார்!

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் நரேந்திர மோடி மீது, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி மீண்டும் புகார் அளித்துள்ளது.
 
மகாராஷ்டிராவில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த மாதம் நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் நரேந்திர மோடி உரையாற்றிய வீடியோ பதிவுகள் மகாராஷ்ட்ரா மாநிலத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
 
அரசு முறைப் பயணத்தில் மோடி உரையாற்றியதை, தேர்தல் பிரசாரத்திற்கு   பயன்படுத்துவது, தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறிய செயல் எனக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சார்பில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரை மணி நேரம் கொண்ட வீடியோ பதிவானது இன்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படுவதாக நாளிதழ்களில்  விளம்பரம் வந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
பணம் கொடுத்து தமது பேச்சை மோடி ஒளிப்பரப்ப  செய்துள்ளார் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. எனினும், மோடியின் மேடிசன் சதுக்க உரை தனிப்பட்ட நிகழ்வு என்றும், அது அரசு நிகழ்ச்சி கிடையாது என்றும் பாரதிய ஜனதா விளக்கமளித்துள்ளது.
 
கடந்த 3 ஆம் தேதி வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், மோடியின் பேச்சில் விதிமீறல் இல்லை என்று அறிவித்தது.