Published:Updated:

மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுதினம் வாக்குபதிவு!

விகடன் விமர்சனக்குழு
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுதினம் வாக்குபதிவு!
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுதினம் வாக்குபதிவு!
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுதினம் வாக்குபதிவு!

மும்பை: மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது. வருகின்ற 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மகாராஷ்ட்ரா, ஹரியானா  மாநில சட்டசபைகளுக்கு வருகின்ற 15 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்ட்ராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதேபோல் ஹரியானா மாநிலத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.

மகாராஷ்ட்ராவில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அதேபோல், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இந்த முறை கூட்டணிகள் உடைந்து அந்த கட்சிகள் அனைத்தும் தனித்தனியே தேர்தல் சந்திக்கின்றன. இதேபோல், மகாராஷ்ட்ர நவநிர்மாண் சேனா கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் தேர்தல் களத்தில் 5 முனை போட்டி நிலவுகிறது.

ஹரியானாவில் காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய தேசிய லோக்தளம் ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டன. இங்கு ஆட்சியை கைப்பற்றுவதற்கு இந்த 3 கட்சிகள் இடையேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. அதன்பின், தலைவர்கள், வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்களில் பேசவோ, ஊர்வலங்களாக செல்லவோ தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது. ஆனால், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.