Published:Updated:

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்!

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்!
மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்!
மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்!

புதுடெல்லி: மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (15ஆம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வேட்பாளர்கள் உள்பட 4,119 பேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இங்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய தேசிய லோக் தளம் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,351 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த இரு மாநிலங்களிலும் நடக்கும் தேர்தலையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 2 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 19ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.