Published:Updated:

மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு

மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும்:  கருத்துக்கணிப்பு
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் பா.ஜ. ஆட்சியை பிடிக்கும்:  கருத்துக்கணிப்பு

மும்பை/சண்டிகர்: சட்டசபை தேர்தல் நடைபெற்ற மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கலாம் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (15ஆம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வேட்பாளர்கள் உள்பட 4,119 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை 55 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், 6 மணி வரை 62 சதவீதம்  வாக்குப்பதிவாகலாம் என எதிர்பார்ப்பதாகவும்  மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

அதேபோல் ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ், பா.ஜ.க., இந்திய தேசிய லோக் தளம் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,351 பேர் களத்தில் உள்ளனர்.  இங்கும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தபோது, 72.6 சதவீத வாக்குகள் பதிவானது.  கடந்த 2009 ஆம் ஆண்டில் 70 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் வரும் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கருத்துக்கணிப்பில் முந்தும் பா.ஜனதா

இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் ( exit poll )  மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா ஆகிய 2 மாநிலங்களிலுமே பா.ஜனதா ஆட்சியை அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கலாம் என தெரியவந்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஹரியானா ( மொத்த தொகுதிகள் 90 )

பா.ஜனதா  - 52 

ஐஎன்எல்டி  - 23

காங்கிரஸ் - 10

இதர கட்சிகள் - 5

மகாராஷ்ட்ரா ( மொத்த தொகுதிகள் 288)

பா.ஜனதா - 151

சிவசேனா - 71

காங்கிரஸ் - 27

தேசியவாத காங்கிரஸ் - 28

மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா மற்றும் இதர கட்சிகள் - 11