Published:Updated:

காஷ்மீரில் தீவிரவாதிகள் 8 பேர் கைது: ஆயுதங்களும் பறிமுதல்!

விகடன் விமர்சனக்குழு
காஷ்மீரில் தீவிரவாதிகள் 8 பேர் கைது: ஆயுதங்களும் பறிமுதல்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் 8 பேர் கைது: ஆயுதங்களும் பறிமுதல்!
காஷ்மீரில் தீவிரவாதிகள் 8 பேர் கைது: ஆயுதங்களும் பறிமுதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 8 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில்  சட்டசபைத்  தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக  ஸ்ரீநகர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  "இளைஞர்கள் பலரை தேர்வு செய்து லஷ்கர்-இ-தொய்பா  அமைப்பு தீவிரவாத பயிற்சி அளித்து வருகிறது.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.