Published:Updated:

காஷ்மீர் தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் போஸ்டர்!

விகடன் விமர்சனக்குழு
காஷ்மீர் தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் போஸ்டர்!
காஷ்மீர் தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் போஸ்டர்!
காஷ்மீர் தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் போஸ்டர்!

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தீவிரவாதிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இந்த தேர்தலையடுத்து, அங்கு 60 ஆயிரம் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 381 பிரிவு மத்தியப் படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் படைகள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், 'காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும்' என்றும், 'ஓட்டு போட வரக்கூடாது' என்றும் அவர் கூறியுள்ளனர்.