Published:Updated:

தேர்தல் தோல்வி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!

தேர்தல் தோல்வி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!
தேர்தல் தோல்வி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!
தேர்தல் தோல்வி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஒமர் அப்துல்லா!

ஜம்மு:   ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் மோடி அலை காரணமாக பாஜக வெற்றிபெற்றது என்று  முதல்வர் பதவியிலிருந்து விலகி உள்ள  ஒமர் அப்துல்லா ஒப்புக் கொண்டுள்ளார்.

காஷ்மீர் மாநில முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, தான் போட்டியிட்ட  இரண்டு தொகுதிகளில் ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் கண்டார்.

சோனாவர் தொகுதியில் அவர் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் அஷ்ரப் மிர்டம் தோல்வி அடைந்தார். பீர்வா தொகுதியில் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒமர் அப்துல்லா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.

இதனிடையே தனியார் டி.வி.க்கு பேட்டி அளித்த  ஒமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரில் மோடி அலை காரணமாக பாஜக வெற்றிபெற்றது என்று ஒப்புக் கொண்டார்.

எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம். மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்க எனக்கு அழைப்பு விடுத்தால் மிகவும் வியப்படைவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.