Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பில் தாமதம் ஏன்?

சென்னை, செப்.21,2011

திருச்சி மாநகராட்சி வழக்கு தொடர்பான தீர்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருப்பதால், உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் எற்பட்டுள்ளது. ##~~##

அந்தத் தீர்ப்புக்குப் பிறகே உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில்,
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆனாலும், திருச்சி மாநகராட்சி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுவதால், தீர்ப்புக்கு பிறகே தேர்தல் தேதி அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு