Published:Updated:

அக்.17, 19 தேதிகளில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்

அக்.17, 19 தேதிகளில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்
அக்.17, 19 தேதிகளில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்

சென்னை, செப்.21,2011

அக்.17, 19 தேதிகளில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்

தமிழகத்தில் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.##~~##

இந்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று வெளியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் வரும் 29-ம் தேதி என்றும், வேட்பு மனு மீதான பரிசீலனை 30-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 3-ம் தேதி ஆகும்.

இரண்டு கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ம் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 17-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும். திருச்சி மாநகராட்சிக்கு இப்போது தேர்தல் நடைபெறாது. அதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சோ.அய்யர் தெரிவித்தார்.
 

அடுத்த கட்டுரைக்கு