Published:Updated:

ஆர்.கே. நகர் தொகுதி இடைதேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்!

 ஆர்.கே. நகர் தொகுதி இடைதேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்!
ஆர்.கே. நகர் தொகுதி இடைதேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்!

ஆர்.கே. நகர் தொகுதி இடைதேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்!

 ஆர்.கே. நகர் தொகுதி இடைதேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்!

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் இன்று தொடங்கியது.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முதல்வர்  ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள்ளார். சொத்துக்  குவிப்பு வழக்கில் விடுதலையான அவர் மீண்டும் முதல்வராகப்  பதவி ஏற்றுக் கொண்டார். 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்.

இங்கு முதல்வர்  ஜெயலலிதாவுக்காக தேர்தல் பணியாற்றவும், வாக்கு சேகரிப்பில் ஈடுபடவும் அக்கட்சி சார்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

திமுக, பாமக்,மதிமுக,தமாகா  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. காங்கிரஸ், பாஜக,தேமுதிக, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகியவை வேட்பாளரை நிறுத்துவது என்பது குறித்து  ஆலோசித்து வருகின்றன.

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடப்போவதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி அறிவித்துள்ளார். அவர் தேர்தலைப் புறக்கணிக்கும் கட்சி தலைவர்களையும் மற்ற கட்சி தலைவர்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சென்னை மாநகராட்சியின் 4 ஆவது மண்டல அதிகாரியுமான சவுரிராஜனிடம் காலை 10.30 மணிக்கு தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனுதாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த இவர் 169 ஆவது  முறையாகத்  தேர்தலில் போட்டியிடுகிறார்.

பிஸ்மில்லா மக்கள் கட்சி தலைவர் வக்கீல் அகமது ஷாஜகான் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் சேலத்தை சேர்ந்தவர். பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். முதல்வர் ஜெயலலிதா வருகிற 5 ஆம் தேதி  பிற்பகல் 2 மணிக்கு வேட்பு மனுதாக்கல் செய்கிறார்.

இதற்காக தண்டையார் பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம், ரிப்பன் மாளிகை என 2 இடங்கள் தயாராகி வருகின்றன. இதில் ஏதாவது ஒரு இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வார்.

தேர்தலில் போட்டியிடுபவர் சுயேச்சையாக இருந்தால் அவரது பெயரை அந்த தொகுதியில் இருந்து 10 பேர் முன்மொழிய வேண்டும். கட்சி வேட்பாளர் என்றால் ஒருவர் முன்மொழிந்தால் போதும்.

மனுதாக்கல் செய்ய 10 ஆம் தேதி  கடைசி நாள் ஆகும். 11 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 13 ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

27 ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் ஓட்டுப்பதிவு நடைபெறும். 30 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று பகலில் முடிவுகள் வெளியாகும்

அடுத்த கட்டுரைக்கு