Published:Updated:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு: கி.வீரமணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு: கி.வீரமணி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு: கி.வீரமணி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு: கி.வீரமணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சி.மகேந்திரனுக்கு ஆதரவு: கி.வீரமணி

தஞ்சாவூர்: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கி அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி பேசினார். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கி.வீரமணி, ''தமிழகத்தல் உள்ள மற்ற கட்சிகளெல்லாம் இடைத்தேர்தலை புறக்கணித்துவிட்ட நிலையில், துணிச்சலாக களம் இறங்கி இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி. மகேந்திரனை வரவேற்கிறேன்.

இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தலிலுமே நாங்கள் போட்டியிடுவது கிடையாது. ஆனால், தமிழகத்தில் உள்ள மற்ற பிரதான அரசியல் கட்சிகளெல்லாம் தேர்தலை புறக்கணித்துவிட்டன.

இந்த இடைத்தேர்தலில் நாங்கள் பிரசாரம் செய்யப்போவது கிடையாது. ஆனால், கழக தோழர்கள் அனைவரும் சி.மகேந்திரனை ஆதரித்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இதேபோல், இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள மற்ற அனைத்து கட்சிகளும், தங்களது முடிவுகளை மறுபரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.

-ஏ.ராம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு