Published:Updated:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 4 பேர் மனுக்கள் வாபஸ்; 28 பேர் போட்டி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 4 பேர் மனுக்கள் வாபஸ்;  28 பேர் போட்டி!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 4 பேர் மனுக்கள் வாபஸ்; 28 பேர் போட்டி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 4 பேர் மனுக்கள் வாபஸ்; 28 பேர் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 4 பேர் மனுக்கள் வாபஸ்;  28 பேர் போட்டி!

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 4 பேர், தங்கள் மனுக்களை இன்று வாபஸ் பெற்றனர்.

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிராஃபிக் ராமசாமி மனுத் தாக்கல் செய்தார்.

அதேபோல், கடந்த 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், நேற்று (9ஆம் தேதி) இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் உள்பட மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான கடந்த 10ஆம் தேதி நிலவரப்படி, 51 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து கடந்த 11ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. அப்போது மதுவிலக்கை வலியுறுத்தி போராடி வரும் காந்தியவாதி சசிபெருமாள், ரவி பறையனார் உள்பட 19 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் சண்முகம், சுப்பிரமணியன், சந்திரமோகன் உள்பட 4 பேர் மனுக்களை திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.மகேந்திரன், இந்திய ராஜ் மோகன் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆர். ஆபிரகாம் ராஜ், அன்பு உதயம் கட்சியைச் சேர்ந்த எம்.சுபாஷ் பாபு, மக்கள் மாநாடு கட்சியைச் சேர்ந்த டி.பவுல் ராஜ், தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த யூ.கே.மணிமாறன், ஜெபமணி ஜனதாவைச் சேர்ந்த ஜெ.மோகன்ராஜ் ஆகியோரும், டிராஃபிக் ராமசாமி உள்பட 21 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு